சூர்யா45 படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? காப்பி தானே அடிச்சிருக்கீங்க…

by Akhilan |   ( Updated:2025-01-08 07:11:24  )
pettaikaran
X

pettaikaran

Surya45: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 45 வது திரைப்படத்தின் டைட்டில் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

மீண்டும் கோலிவுட்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் சூர்யா தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் பாலிவுட் பக்கமாக தன் கவனத்தை திருப்பினார். இதனால் அவர் கோலிவுட்டில் படம் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

அந்த வகையில் மூன்று வருடங்கள் கழித்து வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. வெளியான சில வாரங்களில் ஓடிடிக்கும் வந்துவிட்டது.

ரெட்ரோ: இது தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது பாலிவுட்டில் தன்னுடைய கவனத்தை திருப்பாமல் தொடர் கோலிவுட் படங்களில் நடிக்க முடிவெடுத்த அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்த முடித்து இருக்கிறார்.

இப்படத்தின், கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகிறது. பிரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இக்கதையின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் திரிஷா மீண்டும் சூர்யாவுடன் ஜோடி கூட முதல் முறையாக அபியங்கர் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

பேட்டைக்காரன்: இப்படத்தின் டைட்டில் பேட்டைக்காரனாக இருக்கலாம் என தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. விஜயின் வேட்டைக்காரனை காப்பி அடிச்சிட்டீங்களா என ரசிகர்களும் தற்போது கலாய்த்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story