1. Home
  2. Cinema News

வடை மன்னனாக மாறிய தனுஷ்!.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் சுத்தமான உருட்டு!.. போட்டு பொளந்த ரசிகர்!..

நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் 2 நாட்களில் 50 கோடி வசூல் என சுடுவது எல்லாம் சுத்தமான வடை என நெட்டிசன் ஒருவர் புக் மை ஷோ ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்துப் போட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியான ராயன் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அந்த படம் இரண்டு நாட்களில் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்ததாக சில ஆன்லைன் டிராக்கர்கள் பதிவிட்டு வரும் நிலையில், அதெல்லாம் சுத்தமான உருட்டு என்றும் தனுஷும் வடை சுட ஆரம்பித்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வெள்ளிக்கிழமை வெளியான ராயன் திரைப்படம் முதல் நாளிலேயே பெரிதாக கூட்டம் இல்லை என்றும் சனிக்கிழமையும் சுமாரான கூட்டம் தான் என்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் எளிதாக கிடைக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

திங்கட்கிழமையான நாளை அனைத்து தியேட்டர்களும் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்திலேயே தென்படுவதாக நெட்டிசன் ஒருவர் புக் மை ஷோ ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்து போட்டு தனுஷையும் தனுஷ் ரசிகர்களையும் பங்கமாக கலாய்த்து வருகிறார்.


ராயன் திரைப்படம் குப்பை படம் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், சிலர் காசு வாங்கிக் கொண்டு படம் பெரிய கலெக்‌ஷன் எனக் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாவில் தனுஷுக்கு எதிராக சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ரசிகர்கள் ராயன் படம் ஓடவே இல்லை என்றும் எல்லாமே வடை தான் என்றும் கூறுகின்றனர்.

ராயன் படத்துக்கு கேப்டன் மில்லர் படம் எவ்வளவோ பரவாயில்லை என்றும் அதில், பிரியங்கா மோகன் எல்லாம் நடித்திருந்தார் என்றும் கூறுகின்றனர். ராயன் என்கிற பெயருக்கு பதிலாக குத்தூசி கோவிந்தன் என வைத்திருக்கலாம் என புளூ சட்டை மாறனும் கலாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.