ஸ்டைலு ஸ்டைலுதான்... சூப்பர்ஸ்டாரின் நடிப்பு குறித்து மனைவி சொல்வது என்ன?

by Sankaran |   ( Updated:2025-02-22 16:30:58  )
rajni, latha
X

ஸ்டைலு ஸ்டைலுதான்... சூப்பர் ஸ்டைலுதான்'னு ரஜினியின் பிரபல பாடல் ஒன்று உண்டு. ஸ்டைல் மன்னன் என்றாலே அது ரஜினி தான். அவர் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆரம்பத்தில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு ஸ்டைலாக வாயால் கவ்வி பிடிப்பார்.

தனித்துவமான ஸ்டைல்: அதன்பிறகு அவரது நடை, உடை, கண்ணாடி அணிவது, சிகரெட், பீடியைப் பற்ற வைப்பது என எல்லாவற்றிலும் ஒரு தனித்துவமான ஸ்டைலைக் காட்டி ரசிகர்களைக் குதூகலப்படுத்தினார்.

அது போல அவர் பஞ்ச் டயலாக் பேசி நடிப்பதிலும் மாஸ் காட்டினார். அவர் நடக்கும்போது ஷூவிற்கு கீழ் நெருப்பு கூட வந்தது. அவர் காலால் உதைத்தால் பூமியே அதிர்ந்தது. அப்படி எல்லாம் அவரது ஸ்டைலைப் பயன்படுத்தி தமிழ்சினிமா உலகில் மாஸ் காட்டினார்கள்.

நேச்சுரல் ஆர்டிஸ்ட்: அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர் ஒருவர் ஒருமுறை உங்க கணவருக்கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? அவரோட ஸ்டைலா, நடிப்புத்திறனான்னு கேட்டாங்க. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். அவரைப் பொருத்தவரைக்கும் ஸ்டைல், நடிப்புத்திறன் இரண்டும் சேர்ந்த கலவை. அவர் ஒரு நேச்சுரல் ஆர்டிஸ்ட். நடிப்பைக் கற்றுக்கொண்டு நடிக்க வந்துவிட்டார்.


தனித்துவம்: அவருக்குள் இருக்கும் நடிகர் எப்போதும் விழித்துக்கொண்டே இருப்பார். அதனாலதான் அவரால இயற்கையாக எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க முடிகிறது. அவர் கமர்ஷியல் படங்களில் கூட ஒரு தனித்துவம் இருக்கும். என்னதான் அவர் மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும், ஸ்டைல் இல்லாத ரஜினியை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

காளியா, கபாலியா... ஸ்டைல் இருக்கும்: அவர் காளியாக வந்தாலும் ஒரு ஸ்டைல் இருக்கும். கபாலியாக வந்தாலும் ஒரு ஸ்டைல் இருக்கும். அது இறைவன் அவருக்குக் கொடுத்த வரம் என்று பதில் சொன்னார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story