தனுஷுக்கு கொடுத்த பணத்துக்கு வட்டி மட்டும் இவ்வளவு கோடியா?!.. புலம்பும் தயாரிப்பாளர்!...

Actor Dhanush: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரூட்டை பிடித்தார். ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும், ஒருபக்கம் பக்கா கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்த புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக அமைந்தது. ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக நடிப்புக்கான தேசிய விருதுகளையும் வாங்கினார். இந்த படங்கள் தனுஷை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
இதனால் பாலிவுட்டிலும் கால் பதித்தார். இதுவரை 3 ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் ராயன், இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.

சினிமாவில் ஒரு நடிகரை வைத்து படமெடுக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் அந்த நடிகரின் சம்பளத்தில் பாதியை அட்வான்ஸாக கொடுப்பார்கள். அந்த நடிகர் எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரே அப்போது அவரை வைத்து படமெடுப்பார்கள். அதேநேரம் அப்படி பணம் வாங்கும் நடிகர்களில் சிலர் பல வருடங்களாக அந்த தயாரிப்பாளருக்கு நடித்து கொடுக்கமாட்டார்கள். சிம்பு, தனுஷ், விஷால் எல்லாம் இந்த கேட்டகிரிதான். சினிமாவில் எல்லாமே வட்டி கணக்குதான். எந்த தயாரிப்பாளரும் சொந்த பணத்தில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கமாட்டார்கள்.
அந்தவகையில் 3 வருடங்களுக்கு முன்பே லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் தனுஷுக்கு 14 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கிறார். ஆனால், இப்போதுவரை தனுஷ் அவருக்கு படம் நடித்து கொடுக்கவில்லை. வட்டியோ ஏறிக்கொண்டே போகிறதாம். தனுஷோ அடுத்தடுத்து வேறு சில தயாரிப்பு நிறுவனங்களை கமிட் செய்து நடித்து வருகிறார்.
இப்போது தனுஷ் கையில் இருக்கும் படங்களை பார்க்கும்போது 2026 பாதியில் லலித்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என சொல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அந்த வருட இறுதியில் அப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அப்படி பார்க்கும்போது தனுஷுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி மட்டுமே 35 கோடி வந்துவிடும் என்கிறார்கள். தனுஷை நெருக்கி கேட்கவும் முடியாமல், வட்டியை கட்டவும் முடியாமல் புலம்பி வருகிறாராம் லலித்குமார்.