டைட்டிலிலேயே இவ்வளவு குழப்பமா? ‘லியோ’ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு

leo
கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. பெரிய ஆரவாரத்துடன் அந்தப் படம் வெளியானது. பல சிக்கல்களையும் சர்ச்சைகளையும் கடந்து இந்தப் படம் வெளியானது. யுனிவர்ஸ் என்ற வார்த்தையை பிரபலமாக்கியவர் லோகேஷ். பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. அது லியோ படத்திலும் வொர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் அது கேளிக்கைக்குத்தான் ஆளானது.
அதுவும் இந்தப் படம் A history of violence என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது. படத்தில் ஒன் மேன் ஷோவாக விஜய் செயல்பட்டார் என்பதுதான் உண்மை. சஞ்சய் தத், அர்ஜூன் போன்ற மாஸான ஹீரோக்கள் இருந்தும் அவர்களுக்கு சரியான இடம் கொடுக்கப்பட வில்லை என்பதுதான் பல பேரின் கருத்தாக இருந்தது.
ஊரை விட்டு வெளியேறி வாழும் ஹீரோ என நன்கு பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் ஆக்ஷனில் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போயிருந்தார் லோகேஷ். படத்தில் லியோ என்ற பெயரில் விஜய் நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா? ஆண்டனி. அதன் பிறகு ஆண்டனி தாஸ் என்ற பெயரில் சஞ்சய் தத் அந்தப் படத்தில் வர லியோ என்ற ப்ளாட்டில் படம் நகரத் தொடங்கியது.
எப்படி ஆண்டனி என தலைப்பை தேர்ந்தெடுத்து அதை சஞ்சய் தத் கேரக்டருக்கு லோகேஷ் வைத்தார் என தெரியவில்லை. ஆனால் சஞ்சய் தத்துக்கு படத்தில் சொல்லிக் கொள்ளும் படி ஸ்கோப் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எல்சியூ படங்களாக கைதி, விக்ரம் ஆகியவை முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாக இருந்தும் விக்ரம் படத்தில் குடும்ப செண்டிமெண்ட்டும் இருந்தது.
ஆனால் லியோ படத்தில் அப்படி ஆக்ஷன் செண்டிமெண்ட் இருந்தும் அதை ஏதோ ஒரு வகையில் கதையின் போக்கையே பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனத்தை பெற்றாலும் தான் எப்போதும் வசூல் மன்னன் என லியோ படத்திலும் நிருபித்தார் விஜய்.