Categories: Cinema News Trailer

மிரட்டும் மர்ம பேய்… ‘லிப்ட்’ல் மாட்டிக்கொண்டு கதறும் கவின் – ட்ரைலர்!

நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர் , பிக்பாஸ் போட்டியாளர், நடிகர் என பல முகங்களை கொண்டிருப்பவர் கவின். ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் கவின் நண்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் மேலும் அதிகரித்ததால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கால்பதித்தார். விஜய் தொலைக்காட்சியில் கேரியரை துவங்கிய எத்தனையோ பேர் இன்று உச்ச இடத்தில் உள்ளனர்.

அதே போன்று கவினும் 2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரில் ‘சிவா’ என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி , தாயுமானவன், போன்ற தொடர்களில் நடித்தார். இதற்கிடையில் பிக்பாஸ் வாய்ப்பும் அவரை தேடி வர மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த கவின் நட்புன்னா என்னான்னு தெரியுமா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். பிக்பாஸுக்கு பிறகு நல்ல கதைகள் கவினை தேடி வந்த நிலையில் திரில்லர் படமான லிப்ட் எனும் படத்தில் தற்போது நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி மிரளவைத்துள்ளது. லிப்ட் படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=Kj50JODc5Cc

பிரஜன்
Published by
பிரஜன்