அஜித் பிரியாணிக்கு ஸ்பெஷல்னா? கேப்டன் எதுல ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லாரும் போற்றக்கூடிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்தார். சினிமாவில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த் இதுவரை தமிழ் மொழியைத் தவிற பிற எந்த மொழிகளிலும் அவர் நடித்ததே இல்லை. அந்தளவுக்கு தமிழ் மொழியின் மீதும் தமிழ் ரசிகர்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர் விஜயகாந்த்.
அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாது எனினும் படங்களில் அவர் ஆங்கிலத்தை பெரும்பாலும் தவிர்த்திருக்கிறார். அரசியலிலும் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று வரை இந்த மாதிரி ஒரு மனிதரை மீண்டும் பார்க்க மாட்டோமா என ஏங்க வைத்தவர் விஜயகாந்த். சட்டமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏவாக எதிர்கட்சி தலைவராக அனைத்திலும் சிறப்பான பணியை கொடுத்திருக்கிறார்.
அவரது உடல் நலம் மட்டும் நன்றாக இருந்து இன்னும் அவர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் இன்று தமிழகத்தை ஆளும் தகுதியை பெற்றிருப்பார் விஜயகாந்த். அந்தளவுக்கு மக்களிடம் நல்ல பெயரையே சம்பாதித்தார். இன்று அவருடைய மறைவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் பெரும் சோகத்தையே தந்திருக்கிறது. இந்த நிலையில் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படம் கூடிய சீக்கிரம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது.
அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களுடன் திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அந்தப் படத்தின் ப்ரோமோஷனிலும் சண்முகப்பாண்டியன் கலந்து கொண்டு வருகிறார். பல யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் தன் அப்பா சிறுவயதில் எப்படியெல்லாம் இருந்தார்?
குடும்பத்தின் மீது எந்தளவு பாசம் கொண்டார் என்பதை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அப்பாவுக்கு வேண்டியதை எல்லாம் அம்மாதான் உடன் இருந்து பார்த்துக் கொண்டார். அது கடைசி வரை அப்படியேதான் இருந்தது. எங்கு இருந்தாலும் மதிய சாப்பாடு என்ன சமைக்க வேண்டும் என்பது கொண்டு சொல்லிவிட்டு சென்று விடுவாராம் விஜயகாந்த். அம்மாவும் உதவியாளர்களும் சேர்ந்து விஜயகாந்துக்கு தேவையானதை சமைத்து வைப்பார்களாம். ஆனால் பட்டர் பன் அப்பாவின் ஸ்பெஷல். அவரே அதை சமைத்துக் கொடுப்பார். நன்றாக செய்வார் என்றும் சண்முக பாண்டியன் கூறினார்.