Deepika Padukone: இங்க எத்தனையோ தீபிகா இருக்காங்க.. கோலிவுட்டுக்கு அந்த தைரியம் இருக்கா?
Deepika Padukone:
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென கல்கி படத்தில் இருந்து நீக்கப்பட்டது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கல்கி படத்தின் முதல் பாகத்தில் தீபிகாவின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அவர் கருவில் இருக்கும் குழந்தை தப்பிக்குமா? பிழைக்குமா? அந்த குழந்தை என்னவாக போகிறது என்பதை பார்க்க கல்கி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
மாஸ் காட்டிய தயாரிப்பு நிறுவனம்:
கல்கி படத்தின் போதே தீபிகா கர்ப்பமாக இருந்தார். இப்போது குழந்தை பிறகு பல்வேறு நிபந்தனைகளை அவர் விதித்து வருவதாக கூறப்பட்டது. அதாவது அவர் கேட்கும் அந்த நிபந்தனைகளால் தயாரிப்பாளருக்கு அதிக அளவு செலவாகிறது. அதனால் கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகாவை வெளியேற்றி மாஸ் காட்டியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
படப்பிடிப்பில் 7 மணி நேரம் மட்டுமே இருப்பேன். தன்னுடன் வரும் 25 உதவியாளர்களுக்கும் தேவையான அனைத்து செலவுகளையும் தயாரிப்பு நிறுவனம்தான் பார்க்க வேண்டும். முதல் பாகத்தில் கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட 25 % கூடுதலாக சம்பளம் வேண்டும் போன்ற நிபந்தனைகளை அவர் முன் வைத்தார். இது குறித்து பேச்சுவார்த்தையில் தீபிகாவும் தயாரிப்பு நிறுவனமும் ஈடுபட கடைசியில் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
கதையில் மாற்றம்:
வேறு வழியில்லாமல் கல்கி படத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்டார். அதனால் கதையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் தீபிகாவை சுற்றியே கதை இருந்ததாகவும் அதை இப்போது மாற்றம் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் அமீர்கான் இதை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருப்பது பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
அதாவது ஏகப்பட்ட செலவு செய்து அதாவது தனது உதவியாளர்களுக்கு தேவையான சாப்பாடு செலவு, தங்குமிடம் என அனைத்தையும் தயாரிப்பு தரப்பில் கட்டும் தீபிகா படுகோனேவை கல்கி 2 படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் எனது மேக்கப் மேன், காஸ்ட்யூமர் ஆகியவர்களுக்கு மட்டுமே தயாரிப்பாளர் பணம் தர வேண்டும்.
அமீர்கான் பேச்சு:
அதை விட்டு பல உதவியாளர்களை அழைத்து வந்த அவர்களுக்கான மொத்த செலவையும் அவர்கள் மீது கட்டுவது மிகத் தவறு. ஒரு கட்டத்திற்கு பிறகு உச்சத்தை அடைந்ததும் பல நடிகர்கள், நடிகைகள் இந்த மாதிரி தவறை செய்கிறார்கள் என அமீர்கான் கூறியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு தைரியமான முடிவை கல்கி படத்தின் தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது.
தீபிகா படுகோனே மாதிரியான பல பேர் நம் கோலிவுட்டிலும் இருக்கிறார்கள். ஆனால் படத்தின் புரோமோஷன், படத்தின் ஹைப்பை கூட்ட அவர்கள் என்ன கேட்டாலும் சம்பந்தப்பட்ட உச்ச நடிகைகளுக்கு சேவை செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு இருக்கிற வரைக்கும் தமிழ் சினிமா அப்படியேத்தான் இருக்கும். ஆனால் ஒரு வேளை அந்த படம் தோல்வியில் முடிந்தால் கடைசியில் சமூக வலைதளங்களில் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
