நடிகர் டூ இயக்குனரான சூப்பர் டூப்பர் டாப் லிஸ்ட்… அட இந்த ஹீரோவுமா?

Actor: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் சிலர் டைரக்ஷன் செய்யவும் களம் இறங்கினார். இதில் சிலர் வெற்றி பெற்றாலும் பலருக்கு தோல்வியே நிலவியது. இதில் டாப் 5 நடிகர்கள் இயக்குனராக மாறிய லிஸ்ட் இங்கே.
தமிழ் சினிமாவில் ஒரு துறையில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறையில் ஹிட்டடித்த பிரபலங்கள் லிஸ்ட்டில் கமல்ஹாசன் பெயர் எப்போதுமே இருக்கும். நடிகராக, பாடகராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக பன்முகம் காட்டுபவர்.
இவர் சினிமாவில் இயக்குனராகவும் இருந்து இருக்கிறார். அவர் நடிப்பில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தினை இந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் இயக்கினார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஹேராம் படத்தினையும் இயக்கினார். இதுவரை தமிழில் 4 படங்களையும், இந்தியில் ஒரு படமும் இயக்கி உள்ளார்.
மக்கள் கலைஞனாக ரசிகர்களிடம் என்றுமே புகழ் பெற்ற கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் மட்டுமல்ல படத்தினையும் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் வெளியானதுதான் விருதகிரி திரைப்படம். ஆனால் இந்த படம் பெரும் தோல்வி. தன்னுடைய ஆசைக்காக ஒரு படத்தினை இயக்கிய விஜயகாந்த் அதன் பின்னர் அரசியலில் பிஸியாகியதால் அவர் பின்னர் படம் இயக்கவில்லை.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த 90களில் பிரபல ஹீரோவாக இருந்தவர் சரத்குமார். அவர் தன்னுடைய அரசியல் பிரவேசம் மேலும் பிரபலம் அடைய இயக்கிய திரைப்படம் தான் தலைமகன். நயன் ஜோடி போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய நஷ்டம் ஆகி சரத்குமார் இயக்கத்திற்கே குட் பாய் சொன்னார்.
நக்கல் பேச்சுக்கு சொந்தக்காரரான சத்யராஜும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அவர் இயக்கத்தில் வில்லாதி வில்லன் படத்தினை இயக்கினார். மூன்று வேடங்களில் சத்யராஜ் நடிக்க படம் சூப்பர்ஹிட் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் இயக்கிய திரைப்படம் ராக்கெட்ரி. பிரபல ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதை தட்டியது.
ஹீரோவாக இருந்து இயக்குனராக மாறி இருக்கும் தனுஷ் தொடர்ச்சியாக படம் இயக்கி வருகிறார். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அவர் இயக்கிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் சில மாதங்களில் அவர் இயக்கத்தில் இட்லிகடை வெளியாக இருக்கிறது.
கமல்ஹாசன் போல பல துறைகளில் வித்தகராக இருப்பவர் சிலம்பரசன். ஆனால் அவர் இயக்கத்தில் வல்லவன் சூப்பர்ஹிட் அடித்தும் அதை தொடர்ந்து அவர் எந்த படமும் இதுவரை இயக்காமல் இருந்து வருகிறார்.
இந்த லிஸ்ட்டில் இன்னும் சில மாதங்களில் இணைய இருக்கிறார் பிரபல நடிகர் ரவி மோகன். இவர் தன் அண்ணனை போல இயக்கத்தில் இறங்கி இருக்கும் நிலையில் முதல் படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.