ரஜினி கடவுள் மாதிரி.... லிவிங்ஸ்டன் சொன்னதுக்குப் பின்னாடி இத்தனை சோகமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தை நடித்து முடித்த கையோடு கூலி படத்தில் பிசியாக இருக்கிறார். வேட்டையன் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் ரஜினி வழக்கமாக சொல்லும் குட்டிக்கதை இடம்பெற்றது.

இதுல என்ன சொன்னாருன்னா டோபி, கழுதை பற்றிய கதை. இதுவும் வைரலானது. இப்போது ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸை நெருங்கிக் கொண்டு இருப்பதால் சமூகவலைதளங்கள், இணையதளம் என எதைத் தொட்டாலும் ரஜினி பற்றிய செய்திகள் தான்.அந்த வகையில் இப்போது நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அது நெஞ்சைப் பிழிவதாக உள்ளது. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

என்னுடைய மனைவிக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. ஒரு மாசத்துல ஆபரேஷன் பண்ணவில்லை என்றால் இறந்து விடுவார்கள் என்று சொன்ன உடனே எல்லாரும் நொறுங்கிப் போயிட்டோம். அப்போ நான் லால் சலாம் பண்ணிட்டு இருந்தேன்.

என் மனைவி விஷயம் ரஜினி சாருக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவர் எனக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். இன்னைக்கு என் மனைவி உயிரோடு இருப்பதற்குக் காரணம் ரஜினி சார் தான் என்கிறார் லிவிங்ஸ்டன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிகர் லிவிங்ஸ்டன் இணைந்து கடைசியாக நடித்த படம் லால் சலாம். இதற்கு முன்பு சிவாஜி, அண்ணாத்த, வீரா, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் லிவிங்ஸ்டன் இணைந்து நடித்துள்ளார். சொல்லாமலே, சுந்தரபுருஷன் படங்களில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினார் லிவிங்ஸ்டன.


அண்ணாத்த படம் வந்த சமயம் ரஜினி குறித்தும், அமிதாப்பச்சன் குறித்தும் லிவிங்ஸ்டன் பேசியிருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. ரஜினி அந்தளவுக்கு அழகானவர் கிடையாது. அவரோட வளர்ச்சிக்கு அவரது திறமை தான் காரணம். அமிதாப்பும் சரி. ரஜினியும் சரி. இருவரும் வெற்றியைப் பெற்றதுக்குக் காரணமே அவங்களோட நம்பிக்கை தான் காரணம் என்றும் தெரிவித்து இருந்தார்.

ரஜினி உதவி செய்வது பலருக்கும் தெரியாது. ஏன்னா அவர் விளம்பரப்படுத்தாதவர். ஒருவர் உதவி கேட்டு கொடுக்குறது சாதாரண விஷயம். ஆனா உதவி கேட்காமலேயே குறிப்பால் உணர்ந்து செய்றதுங்கறது பெரிய விஷயம். ரஜினி செஞ்சது அந்த வகை தான்.

Related Articles
Next Story
Share it