விஜயகாந்தைப் பற்றி சொல்றாங்களே எல்லாம் உண்மை அல்ல... என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

விஜயகாந்த்தின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். திரைக்கதை ஆசிரியர், இயக்குனரும் கூட. விஜயகாந்த் பேசுற வசனங்கள் எல்லாமே தீப்பொறியாக இருக்கும். இதுக்கு காரணகர்த்தா யாருன்னு லியாகத் அலிகான் தான். இப்படி விஜயகாந்துக்கு பலவழிகளில் உதவியாக இருந்தவர் லியாகத் அலிகான்.
ஆனால் மதுரையில் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பிக்கும்போது அவருடன் இல்லை. இதற்கு என்ன காரணம்? விஜயகாந்தைப் பற்றி வெளியில பேசுறதுல பாதி தான் உண்மை என்கிறார் பிரபல வசனகர்த்தா லியாகத் அலிகான்.
நான் விஜயகாந்த் கூட 2004 வரைக்கும் இருக்கேன். 2005ல கட்சி ஆரம்பிக்கிறாரு. முரளி, சரவணன் வரும்போது விஜயகாந்த் மாதிரியே இருக்கானேன்னு ஆச்சரியமாக பார்த்தாரு. ஆனா எம்ஜிஆர் மாதிரி வர்றதுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்தோம்.
நான் என்ன எழுதுறேனோ அதை அப்படியே படத்துல வச்சிருவாங்க. இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் எனக்கு அவ்ளோ சுதந்திரத்தைக் கொடுத்து வச்சிருந்தாங்க. பூந்தோட்ட காவல்காரன் படத்துல எழுதுன வசனத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். என் மேல அளவுகடந்த பாசம். என் சொல்லுக்கு அவ்ளோ மரியாதை வச்சிருந்தாரு விஜயகாந்த்.
நான் அரசியல் பண்ண விரும்பல. சர்க்கரை தேவன் படத்துல டைரக்டர் பன்னீர்செல்வம். இவரை முதல்ல டைரக்டராக ராவுத்தர் போடச் சொல்லும்போது விஜயகாந்த் ஒத்துக்கல. அப்புறம் நான் தான் பேசி ஒத்துக்க வச்சேன். அதே மாதிரி விஜயகாந்துக்கு ஒரு பிரச்சனைன்னா நான் ராவுத்தர்கிட்ட பேசி பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன்.
இந்த 3 பேருக்கும் அவ்ளோ ஒற்றுமை. விஜயகாந்த் என் மேல இவ்ளோ பாசம் வச்சிருந்ததால நமக்கு இடைஞ்சல் வந்துரும்னு ஒரு சிலர் நினைச்சாங்க. அதனால நான் தான் விஜயகாந்துக்கு எல்லாமேன்னு நான் தான்னு நான் பேசுனதாக சொல்லி கிளப்பிட்டாங்க. விஜயகாந்துக்கு கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும் எல்லாமே நான்தான் எழுதிக்கொடுத்தேன். அது எல்லாருக்குமே தெரியும்.
என் பேனாவும், வார்த்தைகளும் பொய் எழுதுனது இல்ல. இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி எல்லாருமே யூடியூப்ல பேசுறாங்க. அவங்க பக்கத்துலயே இருந்த மாதிரி பேசுறாங்க. ஒண்ணா இருந்த மாதிரி ஒண்ணா சாப்பிட்ட மாதிரி பேசுறாங்க. எனக்குப் பார்த்தா சிரிப்பா வரும். ஆனா அது எல்லாமே உண்மை அல்ல. பாதிதான் உண்மை. என்ன ஒண்ணுன்னா எல்லாருமே நல்லதா பேசுறாங்க. அது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.