இப்ப இல்லன்னா எப்போதுமே கிடையாது.. LCU-க்கு எண்டு கார்டு போட்ட லோகேஷ்?..
இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தனது அசாத்திய கதை சொல்லும் திறமையால் தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து வெகு விரைவிலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார். இன்னும் சொல்லப் போனால் இன்று இவர் தான் நம்பர் ஒன் இயக்குனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய ஹைப்பை கொடுத்தது எல்சியு தான். சொல்லப்போனால் தற்போது வரை அந்த படங்கள்தான் லோகேஷ்க்கு ஹிட் படங்களாக இருந்துள்ளது. அதன் பின் இவர் எடுத்த படம் பெரிதாக பேர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக கூலியை புதிதாக தொடங்கிய youtube சேனல் முதல் அமீர்கான் வரை அடித்துவிட்டனர்.
இந்நிலையில் லோகேஷ் கைதி-2 படத்தை இயக்கப் போவதாக இருந்தது. தற்போது அதுக்கும் முட்டுக்கட்டை போடுவது போல் ரஜினி-கமல் காம்போ படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் லோகேஷும் ஹீரோவாக படங்களில் நடிக்கப் போகிறார். கார்த்தியும் கைதி 2 படத்திற்காக கார்த்தியும் சுமார் 4 வருடங்கள் காத்திருக்கிறார்.
இந்த படத்தை எடுத்தால் தான் எல்சியுவை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று லோகேஷ் பல நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் தற்போது கமிட் ஆகி இருப்பதை பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு கைதி 2 எடுப்பது போல் தெரியவில்லை. இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில் ”லோகேஷின் சம்பளம் இப்பவே 75 கோடி வரை இருக்கிறது. இவர் ரஜினி-கமல் படம் எல்லாம் முடித்து வந்தால் எப்படியும் 100 கோடி 150 கோடி வந்துவிடும்”.
”கைதி 2 தயாரிப்பாளர் லோகேஷ்க்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து படம் இருப்பாரா? என்பது மிகப் பெரிய சந்தேகம்தான். மற்றொரு விஷயம் இந்த படத்திற்கு காலம் தாழ்த்திக் கொண்டே போனால் மக்களிடம் எதிர்பார்ப்பு மிகவும் குறைந்து விடும். அதனால் படத்தை இப்போது எடுக்கவில்லை என்றால் இனி எப்போதும் எடுக்கப்பட முடியாது. அப்படி எடுத்தாலும் அதற்கு பயனும் இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
