லோகேஷ் பண்ண காரியம் அப்படி.. மேடையில் underline காட்டிட்டு ரஜினி போகும்போதே தெரியலயா?
தற்போது சோசியல் மீடியாக்களில் ரஜினி சீக்கிரமாகவே ரிட்டையர்டு ஆகப் போகிறார். 2027 க்கு பிறகு சினிமாவிற்கு குட் பை சொல்ல போகிறார் என்பது போன்று செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் விமான நிலையத்தில் சும்மா மாஸா பயங்கரமா படுவேகமாக அவர் நடந்து போகும் வீடியோவும் வைரலாகி வருகின்றது. இந்த மனுஷனையா ரிட்டையர்டு ஆகப் போகிறார் என்று சொல்கிறீர்கள்?
இவருக்கு இருக்கும் வேகத்தை பார்த்தால் இன்னும் 100 படங்களில் நடிப்பாரே என்று கமெண்ட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது சில தினங்களுக்கு முன் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கமலும் ரஜினியும் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார்கள். அந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார்.2027 ஆம் ஆண்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அதுதான் ரஜினியின் கடைசி படமாகவும் இருக்கும் என அந்தணன் கூறியிருந்தார்.
அதுதான் இப்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. உண்மையிலேயே ரஜினி தரப்பிலிருந்துதான் அப்படியொரு செய்தி வந்ததாக அந்தணன் அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். எப்படியிருந்தாலும் இன்னும் தொடர்ந்து ரஜினி நடிப்பார் என்றே தெரிகிறது. இப்போது ரஜினி கமல் இணையும் படத்திற்கு வருவோம். கூலி படம் வெளியீட்டிற்கு முன்பே ரஜினி கமல் இணையும் படத்தை லோகேஷ்தான் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
கூலி படம் ரிலீஸாக அந்தப் படம் ரஜினிக்கே அதிருப்தியை தந்தது. கூலி படத்தில் இயக்குனர் டச் என எதுவுமே இல்லை. அதுமட்டுமில்லாமல் ரஜினியை பொறுத்தவரைக்கும் நேரத்தை எப்பொழுதும் தவறமாட்டார். சரியான நேரத்திற்கு ஸ்பாட்டில் இருப்பார். கூலி படத்தில் ரஜினி வந்த பிறகு லோகேஷ் தாமதமாக வருவாராம். இதுவும் ரஜினிக்கும் கொஞ்சம் அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறது.
இதெல்லாம் சேர்ந்துதான் ரஜினி கமல் இணையும் படத்தில் இருந்து லோகேஷ் வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கமல் இன்ஃப்ளூயன்ஸை பயன்படுத்தி ரஜினியிடம் பேச லோகேஷ் எவ்வளவோ முயற்சித்தாராம். ஆனால் ரஜினியிடம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதை சூசகமாக ஒரு மேடையிலேயே ரஜினி ' நானும் கமலும் படம் பண்ணப் போகிறோம். கமல் பேனரில்தான். ஆனால் இயக்குனரை இன்னும் முடிவு செய்யவில்லை' என கூறியிருந்தார்.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி இன்னும் வாய்ப்பே இல்லை என்றுதான் தெரிகிறது. அதன் பிறகு தான் நெல்சன் ரஜினி கமல் இணையும் படத்திற்குள் வந்தார். இப்போது ஜெயிலர் 2 படம் தயாராகி வருகிறது. அதன் வெற்றியை பொறுத்தே நெல்சன் ரஜினியிடம் அந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.
