மருத்துவமனையில் அட்மிட்டான ரஜினி... அவர் நிலைமைக்கு லோகேஷ் தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் 73 வயதிலும் ஹீரோவாக நடித்து அனைவரதும் மனதிலும் சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்பவர் ரஜினிகாந்த். பெரும்பாலும் நடிகர்கள் வயதான பிறகு அப்பா, தாத்தா கதாபாத்திரங்களில் நடிக்க சென்று விடுவார்கள். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை மாஸ் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார்.

இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா, மஞ்சுவாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் டீசர் வெளியானது.

ஆனால் இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் நாளை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கின்றது. டீசரில் விட்டதை ட்ரெய்லரில் பிடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

அவருக்கு ரத்த நாளத்தில் சிறிய அடைப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு ஆஞ்சியோ செய்து சரி செய்து விட்டதாக கூறப்படுகின்றது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஐசியூவில் இருக்கின்றார். நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அவரின் உடல்நல குறைவுக்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இன்று பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார்.

அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்ததாவது "இயக்குனர்கள் ரஜினிகாந்தை பல்லாண்டு பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள். ஒரு முறை சங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படத்தில் கூட நடிகர் ரஜினிகாந்தை ரோப்பில் தொங்கவிட்டு காட்சிகள் எடுக்கப்பட்டது. இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்.

மேலும் தற்போது வரை தனது காட்சிகள் எடுப்பதற்கு எவ்வளவு செலவானது அந்த பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டாராம். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த சங்கர் உடனே படத்தின் கதையையே மாற்றி அமைத்திருந்தார். அதனால் தான் அந்த திரைப்படம் அந்த அளவுக்கு ஓடவில்லை. அந்த திரைப்படம் எடுக்கும் போதே நடிகர் ரஜினிகாந்த் முதிர்ந்த வயதை எட்டியவராக தான் இருந்தார். அதன் பிறகு சங்கர் அவரை மிக கவனமாக கையாண்டு அந்த படத்தை முடித்தார்.

மேலும் சில இயக்குனர்கள் நடிகர் ரஜினிகாந்தை சிரமப்படுத்தாமல் படத்தை எடுப்பார்கள். அப்படி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை கையாளவில்லை. கூலி திரைப்படத்தின் காட்சிகள் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி மழைநீரில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது ரஜினிகாந்தை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக சுடுநீரை கொட்டி அந்த காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

அப்படி அந்த காட்சிகளை எடுக்க வேண்டிய அவசியம் என்ன வேண்டி இருக்கின்றது. ஒரு வெயில் நேரத்தில் எடுத்தால் அதை ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா? மழையில் தான் அந்த சண்டைக் காட்சி அவசியம் இருக்க வேண்டுமா? இதனால் தான் நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கின்றது. தற்போது மருத்துவர்கள் அவரை கட்டாயம் ஓய்வு எடுக்கக் கூறுவார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் கூலிப் படத்தின் படப்பிடிப்பு எப்படி நடைபெறும்" என்று அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கின்றார்.

ramya
ramya  
Related Articles
Next Story
Share it