கூலி படத்தால் மொத்த கேரியரையும் இழந்த லோகேஷ் கனகராஜ்… எல்லா படங்களும் ஆட்டம் கண்டுடுச்சே!
Lokesh Kanagaraj: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்த நிலையில் அவருடைய லைன் அப் படங்களில் நிறைய மாற்றங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தினை இயக்கி இருந்தார். படம் தரமான வசூல் செய்து லோகேஷின் கேரியரை உச்சத்துக்கு உயர்த்தியது.
இதன் காரணமாகவே கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தினை இயக்கி இருந்தார். பல ஆண்டுகள் கழித்து கமலின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. வசூலிலும் எக்கசக்கமாக குவிய லோகேஷுக்கான மவுஸ் அதிகரித்தது.
விஜயை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தும் லோகேஷுக்கு கோலிவுட்டில் தனியான மார்க்கெட்டே இருந்தது. இதையடுத்து தன்னுடைய யூனிவர்ஸ் படங்களை இயக்க இருந்த நிலையில் அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க வாய்ப்பு வந்தது.
இதையடுத்து ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தினை இயக்க தொடங்கினார். படம் முதலில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கிட்டத்தட்ட கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓவர் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் படம் முதல் காட்சியில் இருந்தே நெகட்டிவ் விமர்சனம் குவித்தது.
இதனால் லோகேஷின் கேரியரே தற்போது ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் கைதி2 படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூலி படத்தின் கேமியோவையே தவறாக செய்துவிட்டதாக வருத்தப்பட்டு பகீரங்கமாக அமீர்கான் பேசி இருக்கிறார்.
இதனால் இருவரும் செய்ய இருந்த படம் முடக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அடுத்த படத்துக்கு லோகேஷ் கேட்ட 75 கோடி சம்பளத்தை தர மறுக்கிறாராம். தெலுங்கு சினிமாவில் நாகர்ஜூனா தரப்பும் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்களாம்.
உபேந்திரா தரப்பும் ரஜினிகாந்துக்காக செய்தோம் என்றாலும் படம் அவர்களுக்கு திருப்தியை தரவில்லை என்றே சொல்லப்படுகிறது. இனிமேல் லோகேஷின் கேரியரை சரி செய்ய என்ன செய்ய போகிறாரோ என்ற கேள்வியே எழுந்துள்ளது.
