ஃபேன்ஸ் எதிர்பாக்குறத நான் செய்ய முடியாது.. கூலி விமர்சனங்களுக்கு பதில் சொன்ன லோகேஷ்!..
Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கூலி. விஜயை வைத்து லோகேஷ் லியோ படத்தை எடுத்த போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதைவிட அதிகமாகவே கூலி படத்திற்கு இருந்தது. ரஜினி ஒரு மாஸ் நடிகர்.. லோகேஷோ பக்கா ஆக்சன் படங்களை எடுப்பவர். இருவரும் இணைந்ததால் ரசிகர்களிடம் பெரிய ஹைப் உருவானது.
அதோடு படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா மற்றும் கேமியோ வேடக்கில் அமீர்கான் என பலரும் நடிப்பதாக சொல்ல ஹைப் பெரிய அளவுக்கு போனது. அதோடு அனிருத்தின் இசையில் வெளியான பாடல்களும் ஹைப்பை உருவாக்கியது. இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் 1000 கோடி வசூலை பெறாத நிலையில் கூலி படம் அதை செய்யும் என பலரும் பேசினார்கள். ஏனெனில் ரிலீசுக்கு முன்பே இப்படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டது.
ஆனால் படம் வெளியான பின் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக நிறைய காட்சிகளில் லாஜிக் இல்லை. கதை திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பலரும் பேசினார்கள். ஆனாலும் இப்படம் வசூலில் குறை வைக்கவில்லை. இப்படம் 500 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்பட்டது.
படம் வெளியாவதற்கு முன் பல youtube சேனல்களிலும் பேட்டி கொடுத்த லோகேஷ் கூலி படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வந்த பின்னரும் அதுபற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது கூலி படத்திற்கு வந்த விமர்சனங்கள் பற்றி பேசிய லோகேஷ் ‘ரசிகர்களின் ஆர்வத்தை நாம் குறை சொல்ல முடியாது. அதே நேரம் கூலி ஒரு டைம் டிராவல் படம் என்றோ LCU என்றோ நான் சொல்லவே இல்லை. அவர்களாகவே அதை கற்பனை செய்து கொண்டார்கள். படத்திற்கு முன்பு நான் ஒரு ட்ரெய்லரை கூட வெளியிடவில்லை.
என்னால் முடிந்தவரை 18 மாதங்கள் கூலி படம் படம் பற்றிய எந்த தகவலையும் வெளியே சொல்லாமல் நான் பொத்தி பொத்தி வைத்து இருந்தேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் அளவுக்கு யாராலும் படமெடுக்க முடியாது. என்னாலும் முடியாது. நான் ஒரு கதை எழுதுகிறேன். அது ரசிகர்களுக்கு பிடித்தால் எனக்கு சந்தோசம். பிடிக்கவில்லை என்றால் முயற்சி செய்வேன்’ என பேசி இருக்கிறார்.
மேலும் ஒரு படத்தின் வெற்றி என்பது வசூலில் இல்லை. ஒரு திரைப்படத்தை ஒரு இயக்குனர் ரசிகர்களிடம் காட்டிவிட்டாலே அது வெற்றிதான். லாப நஷ்டம் என்பது தயாரிப்பாளருக்குதான். ஒரு படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்கள் பார்த்து விட்டாலே அது இயக்குனருக்கு வெற்றிதான்’ என பேசி இருக்கிறார்.
