கலாநிதிமாறன் கொடுத்த காசுல 5 கோடியை திருப்பிக் கொடுத்த லோகேஷ்!.. என்னா மனுஷன்!..

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் பல மொழிகளிலும் உருவாக்கப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், இப்படத்தின் 3 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது.
இப்படத்தின் டிரெய்லர் கடந்த 2ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேநாளில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசியது ஹைலைட்டாக அமைந்தது. கூலி படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் 1000 கோடியை தாண்டி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.
படத்தின் ரீலிஸ் தேதி நெருங்கிவிட்டதால் படத்திற்கு தொடர்ந்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தொடர்ந்து பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பாங்காங்கில் ஷுட்டிங் நடந்தபோது லோகேஷ் என்னிடம் ’சார் ஷுட்டிங் முடிந்துவிட்டது. சொன்ன பட்ஜெட்டில் 5 கோடி மீதம் இருக்கிறது’ என சொன்னார். நான் ஆச்சர்யப்பட்டேன். சொன்ன பட்ஜெட்டில் 5 மடங்கு அதிகமான பின்னரும் படத்தை முடிக்காத இயக்குனர்கள் இங்கே இருக்கிறார்கள்’ என லோகேஷ் பற்றி அவர் வியந்து பேசினார். கூலி படத்தின் பட்ஜெட் 375 கோடி என சொல்லப்படுகிறது.