லியோ இரண்டாம் பாகம் பேரை அறிவித்த லோகேஷ் கனகராஜ்… நல்லா இருக்கே…

by Akhilan |   ( Updated:2024-10-13 03:54:55  )
லியோ இரண்டாம் பாகம் பேரை அறிவித்த லோகேஷ் கனகராஜ்… நல்லா இருக்கே…
X

Leo: விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியின் இரண்டாம் படமாக வெளிவந்த லியோ படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து லோகேஷ் தெரிவித்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு வெளிவந்த விஜயின் முக்கிய படமாக அமைந்தது லியோ. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

ஹாலிவுட்டின் ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அனிருத் இசையமைப்பு செய்திருந்த இப்படம் காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஷூட் செய்யப்பட்டது. விஜயின் படம் என்றாலும் லோகேஷின் எல்சியூவில் அமைந்ததால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அக்டோபர் 19ந் தேதி கடந்தாண்டு இப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்றாலும் படத்தில் நிறைய முக்கிய ஃபளாஷ்பேக் காட்சியில் குழப்பம் இருந்தது. இதை தொடர்ந்து அப்படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்களும் குவிந்தது.

படத்தின் ரிலீஸுக்கு பின்னர் பேட்டி கொடுத்த லோகேஷ் கனகராஜ் அந்த ஃபளாஷ்பேக் காட்சியே பொய் என்றார். இதுவும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இருந்தும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை குவித்தது. தொடர் சாதனைகளை செய்து வசூலில் சக்கை போடு போட்டது.

இருந்தும் ரசிகர்கள் கிளைமேக்ஸில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்றும் கேள்வி தொடர்ச்சியாக எழுந்தது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினால் பார்த்திபன் என பெயர் வைப்பேன் என தெரிவித்து இருக்கிறார். ஆனால் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்க இருப்பதால் இப்படம் நடக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story