ரஜினி கமல் படம் இல்லனா நெக்ஸ்ட் என்ன?.. லோகேஷ் பிளான் இதுதானா?!…
Lokesh Kanagaraj: கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் திரைப்படங்களை LCU என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கமலை வைத்து விக்ரம், விஜயை வைத்து Master, Leo ரஜினியை வைத்து Coolie ஆகிய படங்களை இயக்கி 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக முன்னேறி இருக்கிறார் லோகேஷ்.
ரசிகர்களை ஏமாற்றிய கூலி:
இவர் இயக்கத்தில் வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் 500 கோடி வசூலை மட்டுமே தொட்டது. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூலை தொடும் முதல் படமாக Coolie இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் லோகேஷ் அமைத்த கதை, திரைக்கதையால் அது நடக்கவில்லை. கிட்டத்தட்ட இந்த படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது என்றே சொல்லலாம்.
ரஜினி - கமல் இணையும் படம்:
ஆனாலும் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார், இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஒரு விழாவில் கமலும் அதை உறுதி செய்தார்.
ஆனால் கூலிப்பட ரிசல்ட் ரஜினியை யோசிக்க வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில்தான் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஜினி ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நானும், கமலும் இணைந்து நடிக்கவிருக்கிறோம். கதையும், இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை’ என கூறினார். ரஜினி சொல்வதைப் பார்க்கும்போது லோகேஷ் கனகராஜ் இயக்குனர் இல்லையா? என்கிற சந்தேகமும், கேள்வியும் பலரின் மனதிலும் எழுந்துள்ளது.
லோகேஷ் இயக்கும் அடுத்த படம்:
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே ரஜினி, கமல் இணையும் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்கிற செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது. சினிமாவில் எல்லாமே வெற்றியை வைத்தே தீர்மானிக்கப்படும். கூலி பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் கமலும், ரஜினியும் வேறு இயக்குனர் பக்கம் போக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சிலர்.
ஒருவேளை அவர்கள் இணையும் படத்தை லோகேஷ் இயக்கவில்லை எனில் ‘அவர் இயக்கும் அடுத்த படமாக கைதி இருக்கும் என்கிறார்கள் பலர். ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
