
Cinema News
இறங்கி வந்த லோகேஷ் கனகராஜ்!.. விரைவில் படம் டேக் ஆப்!.. பரபர அப்டேட்..
Kaithi 2: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதுவும் விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் அவரை அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் மாற்றியது. ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 50 கோடி.
விக்ரமும், லியோவும் 400 கோடிக்கு மேல வசூல் செய்தது. ரஜினியின் கூலி படம் 500 கோடி வசூலை தொட்டது. எனவே லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை 75 கோடியாக உயர்த்தி விட்டார். லோகேஷ் அடுத்து கமல், ரஜினி இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதற்கான கதையை அவர் எழுதி வருவதாகவும் சொல்லப்பட்டது. ஒரு பக்கம் ஏற்கனவே அவர் இயக்க ஒப்புக்கொண்ட கைதி 2 படம் எப்போது தொடங்கும் என்கிற கேள்வியும் ரசிகர்களின் மனதில் இருக்கிறது.
ஒருபக்கம், கார்த்தி நடித்து ஏற்கனவே மூன்று படங்கள் கிடப்பில் கிடக்கிறது. வா வாத்தியாரே, சர்தார் டு ஆகிய படங்களின் ஓடிடி உரிமை விற்கப்படாததால் இன்னமும் வெளியாகவில்லை. தற்போது மார்சல் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் கார்த்தி ஏற்கனவே நடித்த படங்கள் வெளியாகாததால் சுந்தர்.சி பட வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே அந்தப் படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை கைதி 2-வுக்கு கொடுக்கலாம் என நினைக்கிறார் கார்த்தி. எனவே கைதி 2 தொடர்பான பேச்சு வார்த்தைகள் லோகேஷிடம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முதலில், இந்த படத்திற்கு 75 கோடி சம்பளம் கேட்டிருந்தார் லோகேஷ்.
ஆனல், கூலி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் லோகேஷ் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, கைதி 2 திரைப்படம் விரைவில் டேக் ஆப் ஆகும் என்கிறார்கள். ஒருவேளை லோகேஷ் கைதி 2 பட வேலைகளை துவங்கினால் ரஜினி, கமல் நடிக்கும் படம் தள்ளிப் போகலாம் எனவும் சொல்கிறார்கள்.