
Cinema News
Lokesh Kanagaraj: கூலியால் பெரிய படங்கள் இரண்டை இழந்த லோகேஷ்!
Lokesh Kanagaraj: கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜின் கேரியரே தற்போது ஆட்டம் கண்டு இருக்கும் நிலையில் அடுத்த படமே தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
திடீர் வளர்ச்சி கண்ட லோகேஷ்
இயக்குனர் லோகேஷ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். சின்ன நடிகர்களை கொண்டு படத்தை இயக்கி இருந்தாலும் கதைக்காக வலுவாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
அதை தொடர்ந்து ஒரே நாள் இரவு நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தாலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பின்னரே லோகேஷின் வளர்ச்சி ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்திலும் ஹிட் இயக்குனராகினார்.

தொடர்ந்து தன்னுடைய ஆஸ்தான நடிகரான கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார். கொரோனா காலத்திற்கு பின்னர் திரையரங்கில் வெளியான விக்ரம் மிகப்பெரிய வசூலை குவித்தது. கதைக்காக பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது.
அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அதிக விரும்பப்பட்ட இயக்குனராகினார். விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ படம் சில எதிர்மறை விமர்சனங்களை குவித்தாலும் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த வரவேற்பு அவருக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.
ரஜினியும், லோகேஷும்
இருவரும் இணைந்து உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது கூலி. முதல் புரோமோ வீடியோவே காப்பி என சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக எல்சியூ இல்லாமல் படத்தை இயக்க வேண்டும் என ரஜினி தரப்பு கண்டிஷன் போட்டது.
இதனால் தன்னுடைய ரூட்டில் இருந்து மாறி கதையை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனால் லோகேஷின் புது அவதாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனையொட்டி வெளிவந்த கூலி திரைப்படம் அதிருப்தியை ரசிகர்களுக்கு தந்தது.

தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களால் கூலி படத்தின் வசூல் அடி வாங்கியது. 1000 கோடி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 500 கோடியை எட்டியதே பெரிய போராட்டம் எனக் கூறப்படுகிறது. இதனால் லோகேஷின் மீது ரஜினி தரப்பு கடுப்பில் உள்ளனர்.
ரஜினி, கமல் படத்தின் இயக்குனர்
கூலி படத்தின் ரிலீஸுக்கு முன்னரே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருந்தனர். இப்படத்தில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கூலி படம் அதற்கெல்லாம் முழுக்கு போட்டு இருக்கிறது.
கமலுக்கு இந்தியன்2, தக் லைஃப் படங்கள் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களால் அடுத்த ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இந்த கூட்டணி உடனே நடக்க வேண்டும் என்பது எண்ணமாக இருந்ததாம்.
ஆனால் ரஜினிகாந்த் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். ஜெயிலர்2 படத்தினை முடித்துவிட்டு பார்த்துக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூட கமல் தயாரித்து அவருடன் நடிக்க இருப்பதாக ரஜினி ஒப்புக்கொண்டார்.
ஆனால் கதையை இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இதனால் லோகேஷின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முடிவில்லை என்றே நம்பப்படுகிறது. தோல்வியே காணாத லோகேஷின் கேரியரே தற்போது ஆட்டம் கண்டு விட்டது.
லோகேஷின் வீழ்ச்சி
- கூலி படத்தின் தோல்வியால் பின் வாங்கியது ரஜினி மட்டுமல்ல அமீர்கானும் கூட.
- பாலிவுட்டில் அமீர்கான் நடிக்க லோகேஷ் இயக்க இருந்த படம் நடக்காது எனக் கூறப்படுகிறது.
- அருண் மாதேஸ்வரன் படத்தில் நடித்து விட்டு லோகேஷ் அடுத்து கைதி 2 படத்திலே களமிறங்கி தன்னை நிரூபிக்க முயற்சி செய்வார் என்றே கூறப்படுகிறது.