‘கூலி’ படத்தின் மோசமான விமர்சனம்! பக்கா ப்ளான் போடும் லோகேஷ்.. இத எதிர்பார்க்கலயே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கூலி படம் நான்கு நாள்களில் 400 கோடிக்கு மேல் வசூலித்து வசூலில் சாதனை அடைந்தது. கதையில் ஆழம், உணர்ச்சி ஆகியவை இல்லாவிட்டாலும் வன்முறை, அடிதடி, ரத்தம் என பக்கா ஆக்ஷன் படமாக வெளியாகி இளைய தலைமுறை பார்வைகளை இந்தப் படம் வெகுவாக கவர்ந்தது.
இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழை அளித்து சென்சார் போர்டு செக் வைத்தது. அதன் மூலம் 18 வ்யதுக்குட்பட்டவர்கள் இந்தப் படத்தை பார்க்க திரையரங்கில் அனுமதிக்கவில்லை. இதுவும் ஒருபக்கம் படத்தின் வசூலை பாதித்தது. ரஜினியுடன் இந்தப் படத்தில் அமீர்கான், நாகர்ஜூனா, சத்யராஜ், உப்பேந்திரா என வெவ்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் ஒன்று சேர்ந்து படத்தின் ஹைப்பை அதிகரித்தனர்.
மேலும் படத்தில் மோனிகா பாடல் முதலில் வெளியாகி கூஸ் பம்பை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சன ரீதியாக படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் லோகேஷ் மீதிருந்த நம்பிக்கை குறைய தொடங்கியது. இதனால் லோகேஷ் இப்போது ஒரு புது ஐடியாவில் இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது ரஜினியுடன் மீண்டும் லோகேஷ் இணைய முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. கூலி திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டினாலும் விமர்சனம் ரீதியாக எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றது. இது லோகேஷின் பலவீனமான படைப்பை வெளிக்காட்டுகிறது என்று கூறி வந்தார்கள். அதனால் விக்ரம் 2 மற்றும் கைதி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருடைய லைன் அப்பில் இருந்தாலும் ரஜினியின் கால்ஷீட்டை பெறவே லோகேஷ் முயற்சித்து வருவதாக கூறி வருகிறார்கள்.
ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் கோடம்பாக்கத்தில் சிலர் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் ரஜினி கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் எப்படி ரஜினி லோகேஷுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்