‘கூலி’ படத்தில் ரஜினியின் பேட்ஜ் நம்பரின் ரகசியம்! சீக்ரெட்டை உடைத்த லோகேஷ்

by Rohini |
rajinicoolie
X

rajinicoolie

இன்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூலி படத்தின் டிரெய்லர் வெளியானது. நேரு ஸ்டேடியத்தில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு ரஜினி, லோகேஷ் கனகராஜ், அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என அனைவருமே கலந்து கொண்டனர். இதில் அமீர்கான் படு மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

அரங்கம் அதிர படத்தில் என்ன மாதிரியான கெட்டப்பில் அமீர்கான் வந்தாரோ அதே கெட்ட்டப்பில் தன் கட்டுமஸ்தான உடம்பை காட்டியவாறு நுழைந்தார். படத்திற்கு இசை அனிருத். இது கூலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவாக இருந்தாலும் ரஜினியின் பொன்விழா ஆண்டை கொண்டாடுவது மாதிரியான ஒரு விழாவாகத்தான் பார்க்கப்பட்டது. ரஜினி இந்த சினிமாவிற்கு வந்து 50 ஆண்டை நிறைவு செய்கிறார்.

அதனால் பெரிய அளவு இந்த விழாவை கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்தனர். அந்த வகையில் ரஜினி பேசிய சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் தான் 1950 மாடல் என்றும் லட்சம் கிலோ மீட்டர் ஓடிவிட்டேன், பல பார்ட்டுகள் என்னுடைய உடம்பில் மாற்றியாகவிட்டது என்றும் தன்னையும் ஆட வையுங்கள் என்று டான்ஸ் மாஸ்டரிடம் கேட்டதாகவும் ரஜினி கூறியிருக்கிறார்.

அதே போல் லோகேஷ் பேசியதும் வைரலாகி வருகின்றது. கூலி படத்தின் போஸ்டர் ரிலீஸாகும் போது அதில் ரஜினி அவருடைய கையில் ஒரு பேட்ஜ் அணிந்திருப்பார். அதில் 1421 என்ற நம்பர் இருக்கும். இதில் ஏதேனும் குறியீடு இருக்கிறதா என அப்போதிலிருந்தே அனைவரும் கேட்டு வந்தனர். அதற்கான பதிலை லோகேஷ் இன்று கூறியிருக்கிறார். அதாவது லோகேஷின் தந்தை பஸ் கண்டக்டர்.

அப்போது அவருடை அப்பா இந்த நம்பரைத்தான் பயன்படுத்தினாராம். அதனால்தான் கூலி படத்தில் ரஜினி சாருக்கும் பயன்படுத்தினேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

Next Story