கைதி 2-வுக்கு நான்தான்னு ஆசையா சொன்னாரு… இப்படி ஏமாத்திட்டாரே லோகேஷ் கனகராஜ்!..
Kaithi 2: ஒரு திரைப்படத்திற்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்த காட்சிக்கான மூடை ரசிகர்களுக்கு செட் பண்ணுவது பின்னணி இசைதான். ஒரு இயக்குனர் வசங்களால் சொல்ல முடியாதவற்றை பின்னணி இசை மூலம் ஒரு இசையமைப்பாளர் சொல்லிவிட முடியும். இதற்கு மிகப்பெரிய உதாரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா.
அவரைப் போல் பின்னணி இசை அமைப்பவர் உலகிலேயே எவரும் இல்லை என்று சொல்ல வேண்டும். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்தினம் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களிலும் தனது அசத்தலான பின்னணி மூலம் காட்சிகளின் உணர்வை அழகாக ரசிகர்களுக்கு கடத்தியவர் இவர்.
இப்போது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் பின்னணி இசையை அவ்வளவு சிறப்பாக யாரும் அமைப்பதில்லை. இதில் அனிருத்தும், சாம் சி.எஸ் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவுக்கு பேசப்படுகிறார்கள்.
அனிருத்தை பொறுத்தவரை ஜெயிலர், லியோ, விக்ரம், மாஸ்டர், கூலி போன்ற படங்களுக்கு சிறப்பான பின்னணியை கொடுத்து ரசிகர்களிடம் கைத்தட்டலை வாங்கினார். அதேபோல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் பல படங்கள் பின்னணி இசைக்கு சாம்.சி.எஸ்-ஐ நம்பி இருக்கிறது. பின்னணி இசை மட்டுமல்ல. சாம்.சி.எஸ் பல அற்புதமான ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார்.
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த வணங்கண் படத்தில் கூட பின்னணி இசை அமைத்தது இவர்தான். விக்ரம் வேதா, அம்புலி, புரியாத புதிர், நோட்டா, அடங்கமறு, அயோக்யா, கைதி, டிமான்டி காலனி, பிளாக் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான். 1800 கோடியை வசூல் செய்த புஷ்பா 2 படத்தின் தமிழ் வெர்சனுக்கு பின்னணி இசை அமைத்தவரும் இவர்தான்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் அசத்தலான பின்னணியை செய்ய கொடுத்திருந்தார் சாம் சி.எஸ். தற்போது கைதி2 படம் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றில் பேசிய சாம்.சி.எஸ் ‘ கைதி 2 படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நான் இசையமைத்தால் நன்றாகவே இசையமைப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
லோகேஷும் ஒருமுறை ‘இந்த படத்தை நம்ம பண்றோம் ப்ரோ’ என என்னிடம் சொன்னார். ஆனால் அதை நான் சொல்ல முடியாது. இயக்குனர்தான் சொல்ல வேண்டும். கைதி படத்தில் நான் கொடுத்த இசை புதுமையானது. அதை வேறு படத்தில் பயன்படுத்த முடியாது. வேறு யார் இசையமைத்தாலும் நன்றாக இசையமைப்பார்கள். ஆனால் நான் கொடுத்த இசை புதுமையானது’ பேசி இருந்தார்.
இந்நிலையில்தான் நேற்று ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘அனிருத் இல்லாமல் எந்த படத்தையும் இயக்க மாட்டேன். ஒருவேளை அவர் சினிமாவை விட்டு விலகினால் நான் வேறு ஒருவரிடம் போவேன்’ என சொல்லி இருந்தார். லோகேஷ் சொல்வதை பார்க்கும் போது கைதி 2-விற்கும் அனிருத்தே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ‘சாம்.சிஎஸ் ஆசையாக சொன்னார். ஆனால் லோகேஷ் அவரை ஏமாற்றி விட்டார்’ என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
