சண்டைக்கு சம்பந்தமில்லாத ரெண்டு பாடி.. யாரை சொல்றாரு லோகேஷ்?

lokesh
லோகேஷ் தற்போது கூலி படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. அதனால் கூலி படத்தின் புரோமோஷன் வேலைகளை கையில் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் துறையில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் படங்களையே கொடுத்து வந்தார்.
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டரையே மாற்றினார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து மோஸ்ட் வாண்டட் இயக்குனர் பட்டியலில் இணைந்தார் லோகேஷ். தற்போது அவரது இயக்கத்தில் கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ரஜினியை வைத்து பெரிய கேங்ஸ்டர் படமாகத்தான் எடுத்திருக்கிறார் லோகேஷ்.
கூடவே பெரிய நட்சத்திர பட்டாளங்களும் இந்தப் படத்தில் இருப்பதால் பிசினஸ் அளவிலும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூலி படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை கையில் எடுக்கிறார் லோகேஷ். ஆனால் கைதி 2 படத்தை ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் ஆகுமாம். அதற்குள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார் லோகேஷ்.
அந்தப் படமும் ஒரு ஆக்ஷன் படம் என்பதால் மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்று வருகிறாராம் லோகேஷ். ஆனால் இந்தப் படத்திற்கு முன்பே அன்பறிவு இயக்கத்தில்தான் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. கூடவே அனிருத்தும் நடிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியானது. இதை பற்றி லோகேஷ் கூறும் போது அன்பறிவு இயக்கத்தில் ஒரு ஸ்கிரிப்ட் தயாரானது உண்மைதான்.
சண்டைக்கே சம்பந்தமில்லாத ஆள்கள்தான் இந்தப் படத்திற்கு வேண்டும் என அன்பறிவும் எதிர்பார்த்தார். ஆனால் டெடிகேஷன் என்ற ஒன்று வேண்டும். நானும் அனியும் பிஸியாக இருந்ததனால் அந்தப் படம் கொஞ்சம் டிராப் ஆனது. அதற்குள் கமலை வைத்து அன்பறிவு படத்தை இயக்க போய்விட்டார்கள். ஆனாலும் என்னை வைத்து படத்தை இயக்க பல பேர் கேட்டனர். அருண் மாதேஸ்வரன் என்னுடைய குளோஸ் நண்பர் என்பதால் அவனிடம் சொன்னேன்.

aniruth
அவனும் இளையராஜா பயோபிக்கில் இருந்தார். ஆனால் அந்தப் படம் கொஞ்சம் காலதாமதாம் ஆவதால் கைதி 2 க்கு முன்பு இந்தப் படத்தை எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம் என லோகேஷ் கூறினார்.