ரஜினி ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட் இருக்கு!.. கூலியில் லோகேஷ் செய்த சம்பவம்...

by Sankaran |   ( Updated:2024-12-20 11:04:52  )
Rajni, lokesh
X

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதன் ரிலீஸ் அன்னைக்குத் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். அது இன்று வரை தொடர்வதுதான் ஆச்சரியமாக உள்ளது. தற்போது இந்த 74 வயதிலும் ரஜினி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியான கூலி படத்தில் வைப் சாங் ஒன்று பட்டையைக் கிளப்பியது. பிரபலம் ரஜினியின் இந்தக் கூலி படத்துடைய சாங் பற்றியும் அவரது ஸ்டைல், வேகம், இயக்குனரின் திறமை பற்றியும் என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஜெய்லர்ல அவரு கையைக் காட்டுவாரு. வேற ஒருத்தன் அடிப்பான். ஜெய்லர், வேட்டையன் படத்துல அவரோட தளர்வு தெரியுது. வேட்டையன் படத்துலயும் அவங்களா வருவாங்க. அடி வாங்கிட்டு ஓடிப் போயிடுவாங்க.

பெரிய அளவில ஆடிப் பாடி ஓடி நின்னு செயல்பட முடியுமான்னு இந்த இரண்டு படமும் உருவாக்குச்சு என்கிறார் வலைப்பேச்சாளர் அந்தனன். இதுபற்றி மேலும் அவர் என்ன சொல்கிறார்னு தெரியுமா?

கூலி படத்துல ரஜினியோட டான்ஸ்சைப் பார்க்கும்போது அவரோட வேகம், துண்டை எடுத்துப் போடுறது எல்லாம் 'இது ரஜினி தானா'ன்னே சந்தேகமா இருக்கு. மற்ற யாரும் துண்டை எல்லாம் தோள்ல இப்படி மாத்திப் போட்டா சுளுக்கிக்கிடும்.


ரஜினிகிட்ட துள்ளல் துடிப்பைத் தான் எல்லாரும் எதிர்பார்ப்பாங்க. அதைக் கொடுக்குறவர் சரியான இயக்குனர். அதனால தான் அட்லி எல்லாம் ஜெயிக்கிறாரு. ஒரு ஹீரோவின் ரசிகன் என்ன மாதிரி நினைக்கிறான்னு பார்த்து அதே மாதிரி கொடுக்குறாரு. அதுல லோகேஷ் கனகராஜ் கரெக்டான ஆளு.

டிரைலருக்கு முன்னால டீசர். அதுக்கு முன்னால கிளிம்ப்ஸ்னு ஒண்ணு வருது. அதுக்கு முன்னாடி என்ன வரும்னு தெரியல. அப்படி பிரிச்சி பிரிச்சிக் கொடுத்து ஒரு ரசிகர்களை எதிர்பார்ப்புலயே வச்சிருப்பாங்க. புத்தாண்டுக்கு ஏதாவது ஒண்ணு வர வாய்ப்பு இருக்கு.


கூலி படத்துக்கு 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அனிருத் ரஜினிக்கு ஸ்பெஷலா போட்டுக் கொடுத்துருக்காரு. டிஆர் வாயால போடுற இசையையே மிஸ் பண்ணிப் போட்டுக் கொடுத்துருக்காரு. அவரு பெரிய மெக்கானிக் தான். டிஆரும் இந்த இளைஞர்களோடு பணியாற்றுவதை ரொம்பவே ரசிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story