கூலி என் நண்பனுக்காக எழுதிய கதை!.. சூப்பர்ஸ்டாருக்கே விபூதி அடித்த லோகேஷ்!...
Coolie: மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அதிர வைத்தார். நெருப்பின் மீது நடப்பது போல திரைக்கதை அமைத்திருந்தார். பல இயக்குனர்களும் மாநகரம் படத்தை பாராட்டினார்கள். அதுவும் மிகவும் குறைவான பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் மாநகரம் படம் போலவே ஒரு இரவில் நடக்கும் கதையாக எழுதியிருந்தார். முதன் முதலாக பாடல் இல்லாமல், கதாநாயகி இல்லாமல் கார்த்தி நடித்த திரைப்படம் இது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து அசத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
அடுத்து விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜயை வைத்து லியோ என தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் லோகேஷ் இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், லோகேஷ் கனகராஜுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரின் படங்களை எல்.சி.யூ என சொல்கிறார்கள். அதற்கு காரணம் முந்தைய படத்தில் வந்த ஒரு கதாபாத்திரம் அடுத்த படத்தில் அதே பெயரில் காட்டப்படும். ஆனால், ரஜினியின் கூலி படத்தை புதிதாக எழுதியிருக்கிறார் லோகேஷ்.
இதை ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றில் கூலி படம் பற்றி பேசிய லோகேஷ் ‘என் நண்பன் ஒருவன் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்குவதாக பேசப்பட்ட போது நான் எழுதிய கதை இது. ஒரு பரிசோதனை முயற்சியாக இந்த கதையை எழுதினேன்.
2015-ல் நான் மாநகரம் படத்தை முடித்துவிட்டேன். ஆனால், 2017ல் தான் அப்படம் வெளியானது. அந்த 2 வருடங்கள் சும்மா இருந்த போது நான் எழுதிய கதைகளைத்தான் இப்போது வரை எடுத்து வருகிறேன். கைதி 2 வரை கதை எழுதி வைத்துவிட்டேன். அதன்பின் நான் எடுக்கும் படங்களுக்கு இனிமேல்தான் எழுதுவேன்’ என லோகேஷ் சொல்லி இருக்கிறார்.