கூலி படத்தோட கதை... டிரெய்லர் எப்போது?.. செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!....

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகியுள்ளது கூலி திரைப்படம். இந்தப்படம் பற்றி சமீபத்திய பேட்டியில் லோகேஷ் நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார். அது பற்றி பார்ப்போம்:
இந்த படம் துறைமுகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, யூனியன் தொடர்பான கதை. 4 மாதம் நடித்து கொடுத்தார் ரஜினி., அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று அவரை பார்க்கிறேன். ரஜினி சாருக்கு எழுதுவது என்பது மிகவும் பிடித்திருக்கிறது. முதலில் அவருக்காக ஒரு ஃபேண்டஸி கதையைத்தான் எழுதினேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார்.

ஆனால், அதை திட்டமிட்டபடி கொண்டு செல்லமுடியவில்லை. கண்டிப்பாக ஒன்றை வருடம் தேவைப்பட்டது. எனவேதான் கூலி படத்திற்கான கதையை எழுதினேன். ரஜினி சார் போன்ற நடிகரை வைத்து நாம் எதுவும் செய்ய முடியும். நான் பல புதிய முயற்சிகளை இந்த படத்தில் செய்திருந்தாலும் இது ரஜினி சாரின் படமாகவே இருக்கும். நானும் அதைத்தான் விரும்புகிறேன்.
படத்தின் முதல் பாகத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்கும். அப்படியே படம் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறும். ரஜினி சாரின் மறுபக்கத்தை காட்டியிருக்கிறேன். டிரெய்லர் வீடியோ வரும் வரை நான் எதையும் சொல்ல ஆசைப்படவில்லை. ஒரே ஒரு டிரெய்லரை வெளியிட்டுவிட்டு படத்தை ரிலீஸ் செய்யப்போகிறேன். ரசிகர்கள் ரிலாக்ஸாக அமைந்து படம் பார்த்து முழு திருப்தியுடன் வீட்டுக்கு போவார்கள். கூலி படத்தின் டிரெய்லர் ஆகஸ்டு 2ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் 1000 கோடி அடிக்கும் என நான் சொல்லமாட்டேன். 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை மட்டுமே நினைக்கிறேன். இப்படம் 1000 கோடி வசூல் செய்தால் இது எங்கள் குழுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன். ரஜினி சார் இதற்கு முன் இப்படி ஒரு கதையில் நடித்தது இல்லை. முதன் முறை கதை சொன்னபோதே அவருக்கு பிடித்து உடனே சம்மதம் சொல்லிவிட்டார். முதல் பாதி எமோஷனல், இரண்டாம் பாதி ஆக்ஷன் படம் செல்லும்’ என லோகேஷ் பேசியிருக்கிறார்.