ஷூட்டிங்கில் ரஜினி தலைகீழா தொங்குனாரா...? லோகேஷ் மேல பழி போடறது நியாயமே இல்ல...!
தமிழ் சினிமாவில் 73 வயதை தாண்டிய நிலையிலும், தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, அபிராமி, மஞ்சுவாரியர் துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே லோகேஷ் கனகராஜ் தான் என்று அவர் மீது பழி போட்டு வருகிறார்கள். திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சண்டைக் காட்சியை மழையில் எடுத்ததாகவும், இதன் காரணமாக தான் நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் குறை கூறி வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்தை கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ரோப்பில் தலைகீழாக கட்டி தொங்க விட்டதாக ஆளுக்கு ஒரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்று பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்து இருக்கின்றார். முதலில் இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் உள்ள ஹார்பரில் எடுக்கப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடுவார்கள் என்பதற்காகவும் அது அவருக்கு அவ்வளவு சௌகரியமாக இருக்காது என்பதற்காக விசாகப்பட்டினத்திற்கு படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் மாற்றினார் என்று தெரிவித்திருக்கின்றார்.
மேலும் படத்தின் காட்சிகள் அனைத்தும் ரஜினிகாந்திடம் ஒப்புதல் கேட்கப்பட்டு எடுக்கப்பட்டது தான் எனவும், அவரை கஷ்டப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார். அவர் மீது ஒட்டுமொத்த பலியையும் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று அந்த வீடியோவில் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கின்றார்.