1. Home
  2. Cinema News

பூவை வைத்து மறைத்த லாஸ்லியா... வெளியான வெயிட்டான போட்டோஸ்..!

பூவை வைத்து மறைத்த லாஸ்லியா... வெளியான வெயிட்டான போட்டோஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார். இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான உடைகளில் அவர் வெளியிடும் இன்ஸ்டா பதிவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் பூக்களை வைத்து அவர் வெளியிட்ட போட்டோஸ் வெற லெவெல் வைரலாகி வருகிறது.

இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின், விஜய் டிவியின் பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லத் தொடங்கினார். பிக்பாஸில் சாண்டி கேங் உடன் சேர்ந்து கொண்டு இவர் அடித்த லூட்டிகள் ஏராளம். பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழைச் சரியான முறையில் கையாண்ட லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கை கொடுத்தன.

இவரது நடிப்பில் உருவான முதல் படமான பிரண்ட்ஷிப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். பூக்களை வைத்து வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. க்யூட் புகைப்படங்கள் இதோ..

பூவை வைத்து மறைத்த லாஸ்லியா... வெளியான வெயிட்டான போட்டோஸ்..! பூவை வைத்து மறைத்த லாஸ்லியா... வெளியான வெயிட்டான போட்டோஸ்..!

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.