எல்ஐகே படத்தின் கதை இதுதானா? விக்னேஷ் சிவனுக்கு சூப்பர்ஹிட் பார்சல் பண்ணுங்கப்பா…
LIK: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.
போடா போடி திரைப்படத்தினை இயக்கியவர் விக்னேஷ் சிவன். ஆனால் அவரின் முதல் படம் பெரிய அளவில் ஹிட்டாக அமையவில்லை. தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால் அதை தொடர்ந்தும் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படங்கள் பெரிய அளவு ஹிட் கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து அஜித்குமாரின் திரைப்படமான விடாமுயற்சி படத்தினை முதலில் இயக்க இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.
ஆனால், திடீரென அவர் கொடுத்த எந்த கதைகளுமே அஜித்திற்கு பிடிக்காமல் போக அவரை அப்படத்தில் இருந்து நீக்கினர். இதில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடைந்தனர்.
இதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்தனர். அப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற டைட்டில் வைக்கப்பட்டது. படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மே 16ந் தேதி வெளியாகும் இப்படம் மொபைல் டைம் டிராவல் படமாக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் என இருவரும் இந்த ஜானரில் கில்லி.
அதுபோல லவ் டூடே ஹிட்டை தொடர்ந்து பிரதீப்புக்கு டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் இந்த படம் வர இருப்பதால் கண்டிப்பாக சூப்பர்ஹிட் அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.