
Cinema News
2040-ல் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!.. பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே ஃபர்ஸ்ட் பன்ச் வீடியோ!..
LIK Teaser: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியை வைத்து இயக்கிய அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் நானே ஹீரோவாக நடிப்பேன் என முடிவெடுத்து மூன்று வருடங்கள் உழைத்து அவருக்கென ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான லவ் டுடே சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த காலத்து இளைஞர்களிடம் இருக்கும் செல்போன் காதலை அடிப்படையாக வைத்து படத்தின் கதை, திரைக்கதயை உருவாக்கியிருந்தார் பிரதீப். அந்த படம் இளசுகளை கவரவே நல்ல வசூலை பெற்றது. இப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெற்றி பெற்றது.
லவ் டுடே ஹிட் அடித்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி(LIK) என்கிற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும் நடிக்க துவங்கினார் பிரதீப், இதில் டிராகன் படம் முடிந்து வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்து விட்டது.

இப்படி 3 தொடர் ஹிட்களை கொடுத்தவராக மாறிவிட்டார் பிரதீப். எல்.ஐ.கே படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தது. இப்படத்தை மாஸ்டர், லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமார் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைக்க இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். 2040ல் நடக்கும் ஒரு காதல் பேண்டஸி படமாக எல்.ஐ.கே உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியின் அண்ணனாகவும் பிரதீப்பின் காதலுக்கு வில்லனாகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வீடியோ போல ஃபர்ஸ்ட் பன்ச் வீடியோ என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது.