இது செம சிக்ஸர்!.. 9 நாட்களில் லப்பர் பந்து செய்த வசூல் இவ்வளவு கோடியா?!.

Lubber pandhu: அதிக பட்ஜெட்டுகளில் தயாரிக்கப்படும் சில பெரிய நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெறுவதில்லை. ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் சில சின்ன நடிகர்களின் படங்களில் மொத்த பட்ஜெட்டை விட சில மடங்கு அதிகமாக வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.

தமிழ் திரையுலகில் இது தொடர்ந்து நடக்கும். படம் நன்றாக இருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவிட்டால் இதை யாராலும் தடுக்கவே முடியாது. கருடன், மகாராஜா, வாழை போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். வாழை படம் தயாரிப்பாளர் மாரி செல்வராஜுக்கு 25 கோடிக்கும் மேல் லாபத்தை கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

அதேபோல்தான், கடந்த 20ம் தேதி வெளியான லப்பர் பந்து படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இத்தனைக்கும் இந்த படம் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்தான் வெளியானது. இத்தனைக்கும் இப்படத்தை இயக்கிய சரவணன் பச்சைமுத்துவுக்கு இது முதல் திரைப்படம்.

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் வெறும் ஐந்தரை கோடி பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்தில் தினேஷ் வயதான வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட் என பலரும் நடித்திருந்தனர்.

இரண்டு பேருக்கு இடையே ஏற்படும் ஈகோவுக்குள் கிரிக்கெட்டையும், சமூக அரசியலையும் கலந்து கொடுத்திருந்தார் இயக்குனார். அதோடு, தினேஷை கேப்டன் விஜயகாந்தின் ரசிகராக காட்டி பல இடங்களில் விஜயகாந்தின் பாடலை ஒலிக்கவிட்டு அசத்தியிருந்தார். எனவே, இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாகி 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இப்படம் 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தோடு வேறு சில படங்களும் வெளியானதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதன்பின் வரவேற்பை பெற்றபின் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Related Articles
Next Story
Share it