மாரி செல்வராஜின் பைசனுக்கு ஆப்பு வைத்த லப்பர் பந்து!.. இப்படி ஆகிப்போச்சே!...
சினிமாவில் ஒரே மாதிரி கதை என்பது இயக்குனர்களுக்கே தெரியாமல் போய்விடும். அது எப்படியெனில், ஒரு மாதிரி ஒன் லைனை இருவருமே யோசித்துவிடுவார்கள். அப்படி சில படங்கள் இதற்கு முன்பு வெளியாகியிருக்கிறது. சில சமயம் இரண்டு இயக்குனர்கள் ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை சுட்டு அவரவர் ஸ்டைலில் எடுப்பார்கள்.
வசந்த் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடித்து வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையும், பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் - சிம்ரன் நடித்து வெளியான ஜோடி படத்தின் கதையும் ஒன்றுதான். ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் படமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
பாதி படம் முடிந்தபின் சில இயக்குனர்களுக்கு இது தெரிய வரும். எனவே, கதையில் சில மாறுதல்களை செய்து படத்தை எடுத்து வெளியிடுவார்கள். இதே பிரச்சனையைத்தான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படமும் சந்தித்திருக்கிறது.
கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷும், ஹரிஸ் கல்யாணும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
அதோடு, சாதிய பாகுபாடும் இப்பபடத்தின் பல காட்சிகளில் காட்டப்பட்டிருந்தது. மாரி செல்வராஜ், ரஞ்சித் போல பிரச்சாரமாக சொல்லாமல் காட்சிகளின் வழியே அழகாக சொல்லி இருந்தார் இயக்குனர். இப்போது இந்த படம்தான் பைசன் படத்திற்கு தலைவலியை கொடுத்திருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படம் கபடி விளையாட்டு தொடர்புடையது. அதிலும், வழக்கம்போல் சாதி பாகுபாடு பற்றி பல காட்சிகளை எடுத்துவிட்டார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த படத்தில் வரும் சில காட்சிகள் லப்பர் பந்து படத்தின் காட்சிகளோடு ஒத்திருப்பாதால் தற்போது காட்சிகளை மாற்றி மீண்டும் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் மாரி செல்வராஜ்.