லப்பர்பந்து படத்தை மிஸ் செய்த மாஸ் பிரபலங்கள்… ஆனா அதே ஜோடி நடித்த மொக்கை படம்!...
Lubberpanthu: ஒரு சில நடிகர்கள் மிகச்சிறந்த படங்களை சின்ன காரணத்திற்காக தவற விட்டுவிடுவார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் எடுக்கும் இன்னொரு படம் அவர்களை கைவிடும் சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சமீப காலங்களாகவே பட்ஜெட் திரைப்படங்கள் ரசிகர்களிடம் அதீத பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.
பத்து நாட்களை கடந்தும் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்த அட்டகத்தி தினேஷுக்கு தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயமே தொடங்கும் படியான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டாவது வெற்றியை கொடுத்து இருக்கிறார். இரண்டு ஹீரோக்களுக்குமே இப்படம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. ஆனால் இது திரைப்படம் முதலில் இந்த ஜோடியிடம் செல்லவில்லை.
ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அணுகியது பிரபல நடிகர் நடராஜ் தானாம். அதுபோல ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்திற்கும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் தான் கேட்டிருக்கிறார்.
ஆனால் இருவருமே இந்த கதையில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து தினேஷ் கதாபாத்திரத்திற்கு எஸ் ஜே சூர்யாவிடம் கோரிக்கை வைக்க அவரும் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த கதையை வேண்டாம் எனக் கூறிய ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் நட்ராஜ் இருவரும் இணைந்து கடைசி உலகப் போர் என்னும் படத்தில் நடித்தனர். இப்படமும் லப்பர் பந்து வெளியான அதே நாளில்தான் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.