லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்களா? ஹிட்டு கொடுத்தா விட்றது இல்லையே!..
Lubberpanthu: லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கும் கோலிவுட் நடிகர்கள் குறித்த சுவாரசிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகர் தினேஷை வைத்து லப்பர் பந்து படத்தை இயக்கியவர் தமிழரசன் பச்சமுத்து. முதல் படத்திலேயே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆடம்பரம் இல்லாமல் கதையில் மட்டுமே நம்பிக்கை வைத்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது.
அதிலும் கேப்டன் விஜயகாந்த் கொண்டாடப்பட்ட விதம் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. மீண்டும் ஒரு ரெட்டோ பாடலாக பொட்டு வச்ச தங்க குடம் வைரல் மோடுக்கு சென்றுள்ளது. படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் யாருடன் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலின்படி, தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறாராம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கும்பட்சத்தில் கதையை முழுதாக எழுதி எடுத்து வர அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இட்லிகடை படத்தின் டவுன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதேவேளையில் துருவ் விக்ரமும் இவரிடம் கதை கேட்டு இருக்கிறாராம். அவர் கதை சொல்லி இருக்கும்நிலையில் இரண்டு படங்களுமே அடுத்தடுத்து நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இணையத்தில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.