படத்தில் கெத்து காட்டி சம்பளத்தில் கோட்டை விட்ட தினேஷ்… இம்புட்டு தானா?!

Attakathi Dinesh: நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் தினேஷ். இவருக்கு முதல் முறையாக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது அட்டக்கத்தி திரைப்படம் தான். பா ரஞ்சித் இயக்கத்தில் முதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் லைக்ஸை குவித்தது.

ஆனால் அப்படத்திற்கு பின்னர் தினேஷுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படங்கள் கிடைக்கவில்லை. இருந்தும் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் அட்டக்கத்தி போன்ற வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை.

கடைசியாக ஊர்வசி நடிப்பில் வெளியான ஜே பேபி திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது லப்பர் பந்து திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று இருக்கிறது.

தன்னுடைய வயதுக்கு மீறிய இடத்தில் நாயகியின் தந்தையாக எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் அவர் நடிப்பு படத்திற்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. ரிலீஸுக்கு முன்னர் ஹரிஷ் கல்யாண் படமாக இருந்த லப்பர் பந்து தற்போது அட்டக்கத்தி தினேஷ் திரைப்படமாக மாறி இருக்கிறது.

தற்போது வரை திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் இத்திரைப்படத்தில் தினேஷ் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிக்க தினேஷுக்கு 40 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஹீரோ ஹரிஷ் கல்யாணிக்கு 70 லட்சம் சம்பளமாகவும், ஹீரோயின்களான சுவாஸ்திகா மற்றும் சஞ்சனா இருவருக்கும் தலா 20 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Articles
Next Story
Share it