லப்பர்பந்து படத்தின் முதல் டைட்டில் இதுதான்… ஹீரோயின் முதல் சாய்ஸ் மாஸா இருக்கே…

Lubberpanthu: தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் திரைப்படமாக இருக்கும் லப்பர்பந்து படத்தின் முதல் டைட்டில் மற்றும் நாயகியாக ஸ்வதிகா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் குறித்தும் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம்தான் லப்பர்பந்து. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வதிகா, சஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர். முதலில் 200 திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற உடனடியாக 100க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது.

படத்திற்கு வரிசையாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 13 நாட்களை கடந்து இருக்கும் இப்படத்தின் வசூல் உலகளவில் 23 கோடி ரூபாயிற்கு மேல் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் ஜப்பான் என்றுதான் பெயர் வைக்கப்பட்டதாம். 40 வயதுடைய ஹீரோ ஸ்கொயர் கட் அடித்து கிரிக்கெட்டில் தன்னுடைய குவாலிட்டியை நிரூபித்துக் கொண்டிருப்பவர். அவருடைய கேரக்டர் பெயரும் ஜப்பான் என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஹீரோவிற்கும் அவருடைய மகளின் காதலற்கும் ஏற்படும் ஈகோ குறித்த கதை தான் இது. இயக்குனர் தமிழரசுவின் நண்பர் கம்பெனியில் தான் ஜப்பான் என்ற டைட்டில் முதலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அதை புதுப்பிக்காமல் விட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெயரில் நடிகர் கார்த்தி ஜப்பான் என்ற படத்தில் நடித்து வந்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜப்பான் என்ற கேரக்டர் பெயரை கெத்து என்று மாற்றி படத்திற்கும் லப்பர் பந்து என பெயர் வைத்தனராம்.

இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் என் மனைவியாக சுவஸ்திகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரியாமணி மற்றும் வரலட்சுமி இடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஆனால் இருவருமே இப்படத்தை ஒப்புக்கொள்ளவில்லையாம். அதைத்தொடர்ந்து இந்த கேரக்டரில் நடிகை ஸ்வஸ்திகா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it