Categories: Cinema News

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகமும் இருக்கா? – லைக்கா போடும் புது திட்டம்!..

தமிழ் சினிமாவில் வெகு காலமாக கனவு திரைப்படமாக இருந்து ஒரு வழியாக போன வருடம் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதி வெளியான இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே அதிக மக்களால் படிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது.

எம்.ஜி.ஆர் காலம் முதலே இதை படமாக்குவதற்கான திட்டங்கள் இருந்து வந்தன. அனால் பல இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் முதன் முதலாக அந்த கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

இந்த கதை கொஞ்சம் பெரியது என்பதால் இதை இரண்டு பாகங்களாக திட்டமிட்டார் மணிரத்னம். படத்தின் முதல் பாகமே நல்ல வெற்றியை கொடுத்தது. வருகிற ஏப்ரல் 28 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

மூன்றாம் பாகத்திற்கான திட்டம்:

அருள்மொழிவர்மன் அரசன் ஆவதோடு பொன்னியின் செல்வன் கதை முடியும். ஆனால் லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்து வேறு ஒரு ப்ளான் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்து வருவதால் இதை அடுத்த அடுத்த பாகங்களுக்கு கொண்டு செல்லலாம் என லைக்கா நிறுவனம் யோசிக்கிறது.

ராஜ ராஜ சோழன் அரசன் ஆனப்பிறகு நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் எடுக்கலாம் என பேச்சு வார்த்தைகள் சென்றுக்கொண்டுள்ளன. இரண்டாம் பாகத்தின் வெற்றியை பொறுத்து மூன்றாம் பாகம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் எந்தப் படமும் செய்யாத சாதனை!.. தட்டித் தூக்கிய இந்தியன் 2

Published by
Rajkumar