கங்குவா படத்தை 100 முறை பார்த்த பிரபலம்!. அவர் சொல்றத கேளுங்க!..

by Murugan |
kanguva
X

kanguva

Kanguva: தமிழ் சினிமாவில் சரித்திர கதை கொண்ட திரைப்படங்கள் மிகவும் குறைவுதான். எம்.ஜி.ஆர் துவக்கத்தில் நிறைய சரித்திர கதைகளில் நடித்தார். அதன்பின் அவர் சமூக கதைகளுக்கு மாறினார். அவரைப்போலவே சிவாஜியும் சில சரித்திர கதைகளில் நடித்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு பின் வந்த நடிகர்கள் சரித்திர கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சத்தியராஜ், பிரபு, கார்த்திக் என 80களில் ஹீரோவாக கலக்கிய எல்லோருமே சமூக கதைகளில் மட்டுமே நடித்தனர். அவர்களுக்கும் அதுதான் செட் ஆனது. கடந்த 30 வருடங்கள் சினிமா உலகம் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது. ஆனால், தெலுங்கில் அவ்வப்போது பெரிய ஹீரோக்கள் சரித்திர கதைகளில் நடிப்பார்கள்.

அப்படி ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான திரைப்படம்தான் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. எனவே, அதன்பின் எல்லா மொழிகளிலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படமாக உருவாக துவங்கியது.

கேஜிஎப், புஷ்பா, காந்தாரா, கேஜிஎப் 2, ஜெயிலர், வாரிசு, சலார், கல்கி போன்ற படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்தது. அந்தவகையில் சூர்யா நடித்துள்ள சரித்திர திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.


இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. கங்குவா படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, படக்குழு புரமோஷன் வேலைகளை துவங்கியிருக்கிறது. சூர்யாவும் மும்பை, டெல்லி எல்லாம் சென்று ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி ‘எடிட்டிங்கில் 100 முறை இப்படத்தை பார்த்துவிட்டேன். ஆனால், படம் முடிந்து இப்போது முழுப்படமாக பார்க்கும்போது புதிதாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கங்குவா எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என சொல்லி இருக்கிறார்.

Next Story