12 வருஷம் கழிச்சு இப்படி ஒரு வரவேற்பா?.. 24 மணி நேரத்தில் மதகஜராஜா செய்த பெரிய சாதனை..!

by Ramya |
vishal
X

Madhakajaraja : இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா ஆகியோ நடிப்பில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படத்தை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது.

இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக வேண்டி இருந்தது. ஆனால் அப்போது இருந்த நிதி நெருக்கடி காரணமாக படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்து விட்டார்கள். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில் அப்போதும் படம் ரிலீஸ் ஆகாமல் போய்விட்டது.


கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. 12 வருடம் கழித்து இந்த திரைப்படம் வெளியான காரணத்தால் படம் எப்படி இருக்குமோ என்கின்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்று வருகின்றது. அதிலும் சந்தானத்தின் காமெடியை பார்ப்பதற்காக தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த வருடம் விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்கியதை தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.

அந்த வகையில் ஜனவரி 10ஆம் தேதி வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து இன்று காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா போன்ற திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படங்களுடன் போட்டி போட்டு மதகஜராஜா திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது.

12 ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த காலத்தில் இப்படியான கமர்சியல் திரைப்படங்கள் வெளியாவது இல்லை என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. 2வது நாளில் மதகதராஜா திரைப்படம் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றது. முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்து, இரண்டாவது நாளில் 3.5 கோடி வசூல் செய்து இருக்கின்றது.




இரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 7 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறி வருகிறார்கள். தற்போது தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அது என்னவென்றால் மதகஜராஜா படத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ தளத்தில் மட்டும் 74 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துள்ளன. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் ஒரு திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா? என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். புதிய படங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்திருக்கின்றது மதகஜராஜா திரைப்படம். நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல வசூல் திரைப்படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Next Story