வணங்கான் வசூலை தாண்டிய மதகஜ ராஜா!.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிடுச்சே!....

by Murugan |
vishal
X

Game Changer: பொங்கலை முன்னிட்டு இந்த மாதம் 10ம் தேதி ஷங்கரின் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சரும், பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படமும் வெளியானது. இதில் கேம் சேஞ்சர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பேன் இண்டியா படமாக வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி என சொல்லப்பட்டது. ஆனால், பட நிறுவனம் 186 கோடி என அறிவித்தது.

ஆனால், அது உண்மையில்லை என பலரும் சொன்னார்கள். கேம் சேஞ்சரை ஒப்பிடும்போது வணங்கானுக்கு மிகவும் குறைவான வசூல்தான். ஏனெனில், பாலா ஹிட் படத்தை கொடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. அதோ, அவரின் இயக்கத்தில் நாச்சியார் படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது.


வணங்கான்: இடையில் விக்ரம் மகன் துருவை வைத்து தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை வர்மா என்கிற தலைப்பில் ரீமேக் செய்தார். ஆனால், அந்த படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எனவே, ஆதித்ய வர்மா என்கிற பெயரில் வேறு இயக்குனரை வைத்து மீண்டும் எடுத்தனர். இது பாலாவை அசிங்கப்படுத்தியது போல ஆனது.

தற்போது 6 வருடங்கள் கழித்து அவரின் வணங்கான் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் பார்த்த ரசிகர்கள் எல்லோருமே பாலாவுக்கு இது கம்பேக் படம்தான் என சொல்லி வருகிறார்கள்.


மத கஜ ராஜா: இந்த படம் முதல் நாளில் 3 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான். சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து உருவான மத கஜ ராஜா படம் நேற்று வெளியானது. சுந்தர் சி படம் என்பதால் காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என வெற்றி பெறுவதற்கான எல்லா விஷயங்களும் இதில் இருந்தது.

எனவே, இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.படம் ரிலீஸாகி ஒரு நாள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 3 கோடியே 10 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வணங்கானை விட 10 லட்சம் சேர்த்து இப்படம் வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம் வணங்கான் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ வந்திருப்பதால் அந்த படத்திற்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த இரண்டு படங்களில் எது அதிக வசூலை பெறும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Next Story