கல்யாணம் பண்ணி கர்ப்பமாக்கி கழட்டிவிட்டுட்டார்!.. மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி கண்ணீர்!..
குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும் போதே விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு திருமணம் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நடிகராக மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் மக்களால் அறியப்பட்டாலும் தனது சமையல்கலை மூலம் குக் வித் கோமாளி நடுவராக செயல்பட்டு வெகுஜன மக்களை சென்றடைந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த நிலையில் அன்மையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் என்பவரை திருமணம் செய்தார்.
இவர்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் வைராகி வருந்தது. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்துக் கொடுத்த ரங்கராஜரின் புதிய வாழ்க்கை பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
முதல் மனைவி ஸ்ருதியை திருமணம் செய்த ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரங்கராஜுக்கு ஜாய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதோடு கணக்கின் பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் எளிய முறையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு கோயிலில் ஜாய் மற்றும் ரங்கராஜின் திருமணம் நடந்தது. மேலும் ஜாய் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தற்போது தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்” பதிவிட்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்திருந்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ”சென்னையில் உள்ள கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் 7 மாத கர்ப்பமாக இருக்கும் என்னை ஏமாற்றி விட்டதாக நடிகரும் சமையல் கலைஞருமான ரங்கராஜன் மீது காவல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்”.
இந்த செய்தி மீண்டும் ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பணம் பேர் வசதி வாய்ப்பு இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்று மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
