Madhampatty Rangaraj: மீண்டும் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிறிஸில்டா… இவ்வளோ நடந்து இருக்கா?
Madhampatty Rangaraj: பிரபல செலிபிரிட்டி செஃப் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது கல்யாண பிரச்னை புகைந்து கொண்டு இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டாவின் அடுத்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருடைய குடும்பம் பல ஆண்டுகளாக கேட்டரிங் பிசினஸ் செய்து வந்த நிலையில் தனக்கு சினிமாவில் கிடைத்த புகழை தன்னுடைய பிசினஸாக மாற்றினார்.
இதனால் சமீபத்திய வருடங்களாக எல்லா சினிமா பிரபலங்கள் வீட்டு விஷேசத்துக்கும் இவருடைய கேட்டரிங் தான் சமையல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் நடுவராக பங்கேற்றார்.
அப்போது அவருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்த ஜாய் கிறிஸில்டாவுக்கும் நட்பு ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்க முடிவெடுத்து கோயிலில் திருமணமும் செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் மாதம்பட்டி தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை என்பதால் இந்த விவகாரம் வெளியில் வந்த பின்னர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாய் தரப்பு புகாருக்கு ரங்கராஜ் தரப்பு வாய் திறக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் ஜாய் கிறிஸில்டா தொடர்ச்சியாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவில் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட போது எடுத்த மேலும் புகைப்படங்களையும் இணைத்து இருக்கிறார்.
முத்த புகைப்படங்களுடன் தன்னுடைய குழந்தை சொல்வது போல கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம் எனவும் பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஜாய் மீது ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் இந்த வார குக் வித் கோமாளியில் ரங்கராஜ் கலந்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
