1. Home
  2. Cinema News

நீதிமன்றம் போன மாதம்பட்டி ரங்கராஜ்!.. குக் வித் கோமாளியில் இருந்து நீக்கப்பட்டாரா?

நீதிமன்றம் போன மாதம்பட்டி ரங்கராஜ்!.. குக் வித் கோமாளியில் இருந்து நீக்கப்பட்டாரா?

Madhampatty Rangaraj: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது ஆறாவது சீசனில் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு நடுவராக இருந்து வருகிறார். இன்று வெளியான அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை நிகழ்ச்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டாரா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

சமீப காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் மனைவி இருந்தும் தன்னிடம் அவரை விவாகரத்து செய்ததாக கூறி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டார் என ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடர்ந்து புகார்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார். தற்போது ஜாய் கிரிசில்டா ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அவரை கர்ப்பமாக்கி விட்டு அவரை ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய்கிரிசல்டா புகார் ஒன்றை நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறார். இது சம்பந்தமான வழக்கு தான் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மொத்தமே இரண்டு நடுவர்கள் தான் இருப்பதாக தெரிகிறது. மாதம்பட்டி ரங்கராஜை அந்த ப்ரோமோ வீடியோவில் காணவில்லை.

அதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகின்றது . ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு எடுக்கப்பட்ட எபிசோடு என்பதால் இதில் அவர் இடம்பெறவில்லை என தெரிகிறது. ஒருவேளை இந்த ஒரு பிரச்சனையால் விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அவப்பெயர் வந்து விடுமோ என்று நினைத்துக் கூட அவரை நீக்கி இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

நீதிமன்றம் போன மாதம்பட்டி ரங்கராஜ்!.. குக் வித் கோமாளியில் இருந்து நீக்கப்பட்டாரா?
Rangaraj

ஒரு சில பேர் மாதம்பட்டி ரங்கராஜே இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை. இந்த வார நிகழ்ச்சியில் சீனியர் குக்குகளுக்கும் தற்போது உள்ள குக்குகளுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற இருக்கிறது. இதனால் முந்தைய சீசன்களில் இருந்து விஜே விஷால், மதுரை முத்து, உமாரியாஸ் கான், தர்ஷா குப்தா ,கனி என ஐந்து பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர், அவர்கள் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் போட்டி போட்டு சமைக்கும் மாதிரியான ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது ,அந்த ப்ரோமோவில் தான் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெறவில்லை,

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.