Coolie: இதுதான் அந்த சர்ப்ரைஸா? ‘கூலி’யுடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படம் நாளை உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. ஒரு பேன் இந்தியா திரைப்படமாக கூலி திரைப்படம் வெளியாக இருக்கின்றது. கனடா, ஹிந்தி என பிற மொழிகளில் ஆயிரம் கோடியை படங்கள் வசூலித்த நிலையில் தமிழில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தும் இன்னும் அந்த ஆயிரம் கோடியை தொட முடியவில்லை என்ற ஒரு ஆதங்கம் அனைவருக்குள்ளுமே இருந்ததன.
ஆனால் அந்த ஆதங்கத்தை கூலி திரைப்படம் கண்டிப்பாக தீர்த்து வைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திலும் பெரிய பெரிய உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பதால் மற்ற மொழிகளிலும் கூலி திரைப்படத்திற்கு வசூலில் குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ புக்கிங்கில் ரிலீசுக்கு முன்னதாகவே கூலி திரைப்படம் 600 கோடியை வியாபாரம் பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.
வெள்ளி சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் ஈசியாக ஆயிரம் கோடியை கூலி திரைப்படம் தொட்டுவிடும் என்று அனைவரும் கூறி வருகிறார்கள். படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் இன்னும் இந்த படத்தில் கேமியோ ரோலில் ஒரு நடிகர் நடிக்கிறார் என்ற ஒரு செய்தி பரவி வந்தது. அது ஒரு வேளை சிவகார்த்திகேயனாக இருக்குமோ என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.
ஆனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் இருக்காது என வலைப்பேச்சு அந்தணன் அவருடைய சேனலில் பேசி இருந்தார். இதையெல்லாம் தாண்டி இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் படத்தின் இடைவேளையில் மதராசி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.
மதராசி திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு ஒரு மாஸ் ஹிட் ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் கொடுக்கவில்லை .அதனால் அந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் அந்த ஒரு பெரிய வெற்றியை அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கூலி திரைப்படத்தோடு மதராசி திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாவது கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
