Madharasi: தளபதிலாம் இல்ல.. சூப்பர் ஸ்டாராம்! ‘மதராஸி’ படத்தில் இவருக்கு SK தான் ஆக்டிங் கோச்சாம்
Madharasi Movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் மதராஸி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோர் நடிப்பில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றன. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் அமரன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஏற்படுத்துவாரா என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள்.
இன்று டிக்கெட் புக்கிங் அனைத்து திரையரங்குகளிலும் ஓபன் ஆகி இருக்கிறது. நல்ல ஒரு ஓபனிங் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படத்தின் டிரைலர் வெளியாகி பெரியாளவில் கூஸ்பம்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஒரு ஃபுல் பவர் பேக் ஆக்சன் ஹீரோவாக தான் மதராசி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தெரிகிறார்.
அதுமட்டுமல்ல படத்தில் உள்ள சலம்பல பாடல் வெளியாகி சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் இந்த பாடல் ஆட வைத்திருக்கிறது. சமீப காலமாக சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்கள் மூலம் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே போகிறார். விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு இடத்தில் இருப்பதாகவே ரசிகர்கள் அவரைப் பார்த்து வருகின்றனர்.
இதில் கோட் திரைப்படத்தில் விஜய் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்து பார்த்துக்கோங்க சிவா என்று சொன்னதிலிருந்து அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என அனைவரும் கூறி வருகிறார்கள். அதற்கேற்ற வகையில் விஜய்க்கு எப்படி சின்ன குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே போல தான் சிவகார்த்திகேயனுக்கும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மதராஸி படத்தில் நடித்த ஒரு நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது மதராஸி படத்தில் இவருக்கு சிவகார்த்திகேயன் தான் ஆக்டிங் கோச்சாம். ஜிவி பிரகாஷ் போன்ற பல பேர் நடிகர்களாக வந்தாலும் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போய்விட்டார். சித்தா படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என்னை பாராட்டிய சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸிடம் என்னை அனுப்பி இந்த படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததும் சிவகார்த்திகேயன் தான் என அந்த நடிகர் சொல்லி இருக்கிறார்.
