1. Home
  2. Cinema News

Madharasi: என்னங்க அம்புட்டுதானா? அமரனுக்கு பின்னும் டல்லடிக்கும் மதராஸி டிக்கெட் விற்பனை! போச்சா?

Madharasi: என்னங்க அம்புட்டுதானா? அமரனுக்கு பின்னும் டல்லடிக்கும் மதராஸி டிக்கெட் விற்பனை! போச்சா?

Madharasi: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த திரைப்படமாக வெளியாக இருக்கும் மதராஸி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை பெரிய அளவில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்னணி நடிகராக பேசப்பட்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கோட் திரைப்படத்தில் கேமியோ ஒன்றை செய்து விஜயிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி அவர் சொன்ன டயலாக் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட்டு அடித்தது. 

இனிமேல் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்ற பேச்சுக்களும் அடிபட்டது. அந்த வகையில் அதற்கு அடுத்து வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையையும் நடத்தியது.

Madharasi: என்னங்க அம்புட்டுதானா? அமரனுக்கு பின்னும் டல்லடிக்கும் மதராஸி டிக்கெட் விற்பனை! போச்சா?
#image_title

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து கமல்ஹாசன் தயாரிக்கப்பட்ட படத்தில் அவரின் மனைவி கதாபாத்திரத்தை நடிகை சாய் பல்லவி நேற்று நடித்திருந்தார். இதனால் படம் பெரிய அளவில் பேச்சு பொருளாக மாறியது.

இப்படத்திற்கு பின்னர் நடிகை சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தையும் மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார். இந்த வெற்றிக்கு பின்னர் அவருடைய அடுத்த திரைப்படமாக மதராஸி தற்போது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மிகப்பெரிய இடைவேளைக்கு பின்னர் கோலிவுட்டில் இயக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யூத் ஜமால் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் இரண்டு தினங்கள் முன்னர் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் கோலிவுட்டின் முதல் வரிசையில் பேசப்படும் சிவகார்த்திகேயனின் மதராஸி கடந்த 24 மணி நேரத்தில் பெரும் முப்பதாயிரம் டிக்கெட் மட்டுமே புக் மை ஷோ ஆப்பில் விற்பனை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.