டெரர் லுக்கில் சிவகார்த்திகேயன்!.. மதராஸி புது போஸ்டர் செம ஹைப் ஏத்துதே!…
Madharaasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க துவங்கினார். அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வசூல் செய்யவே சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஒருபக்கம் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார்.
இதில் மதராஸி படம் மட்டும் முடிந்து வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படக்குழு புரமோஷன் வேலைகளில் இறங்கி இருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் பல youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார். அப்போது மதராஸி படம் தொடர்பான பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
சிவகார்த்திகேயனும் நேற்று கூட பெங்களூர் சென்று படத்தை புரமோட் செய்தார். அடுத்து ஹைதராபாத் மற்றும் கேரளா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு துப்பாக்கி எனும் பக்கா ஆக்சன் படத்தை கொடுத்தவர் முருகதாஸ் என்பதால் மதராஸி படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியானது அதில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் மதராஸி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் லுக்கில் இருக்கிறார்.
