மமீதா பைஜூவின் அடுத்த ஹீரோ இவரா? இது வேற லெவல் காம்போவால இருக்கு

மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மமீதா பைஜு. தற்போது தமிழில் அவர்தான் டாப் மோஸ்ட் நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் டியூட் படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரெங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவருடைய கியூட்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நஸ்ரியாவை இங்குள்ள நம் ரசிகர்கள் எந்தளவு கொண்டாடினார்களோ அதே அளவுக்கு ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவருக்கான ஓப்பனிங் நன்றாகவே இருக்கிறது. விஜயுடன் ஜன நாயகன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் சரியாக தமிழில் பேசவோ எழுதவோ தெரியாது.
ஆனால் தொடர்ந்து அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் தமிழை கற்க ஆரம்பித்துவிட்டதாக கூறியிருக்கிறார். பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடித்தது மமீதா பைஜூதான். சூர்யாவுக்கு ஜோடியாக அவர்தான் நடித்தார். கடைசியில் சூர்யாவும் அந்த படத்தில் நடிக்கவில்லை. மமீதா பைஜூவும் நடிக்கவில்லை.
ஆனால் பாலாவை பற்றி அவருடைய கருத்தை பதிவிட்டு பெரும் புரளியை ஏற்படுத்தினார் மமீதா பைஜூ. வணங்கான் படத்தில் நடிக்கும் போது தன்னை பாலா அடித்து துன்புறுத்தியதாக கூறினார். இப்படி ஆரம்பமே அமர்க்களமாக இருக்க இப்போது பல படங்கள் அவரை தேடி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தின் பெயர் இருண்டவானம். ராட்சசன் பட இயக்குனர்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறாராம். அடுத்ததாக விஷ்ணுவிஷால் கட்டா குஸ்தி 2 படம், அருண்காமராஜ் படம், பேச்சுலர் மூவி இயக்குனரின் படம் என அவரும் அடுத்தடுத்து லைன் அப்பில் பிஸியாக இருக்கிறார். மமீதா பைஜூ மற்றும் விஷ்ணு விஷால் காம்போவும் ரசிகர்களுக்கு பிடித்தமான காம்போவாக இருக்கும்.